நன்றி விகடன்.com: ஓட்டெடுப்பு முதல் உளவியல் ஆலோசனை வரை… விழிச்சவால் கொண்டவர்களுக்காக இயங்கும் டெலிகிராம் குரூப்!“குழுவிலுள்ள பலரும் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்தார்கள். குழுவில் இல்லாத ஒருசிலரும் உதவினார்கள். மொத்தம் 77,000 ரூபாய் கிடைத்தது. சிறியதுதான் என்றாலும், எங்களின் நிலைக்கு இந்தத் தொகை பெரியது”விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இயங்கிவருகின்றன இரண்டு வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள். இவற்றில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் இருப்போர் முதல் சாமானியர்கள் வரை பலரும் உறுப்பினர்கள். பார்வையற்றவர்களின் […]
Month: Apr 2020
‘பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்!’ என்ற தலைப்பின்கீழ், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் பேரவையால் இணையவழிக் கருத்தரங்கு இன்று (19, ஏப்ரல்) ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 11 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ஐம்பது நபர்கள் ஜூம் வழியாக இணைந்து, இறுதிவரை உற்சாகம் குன்றாது கலந்துரையாடல் நிகழ்த்தினர். இந்தக் கருத்தரங்கில், தமிழகத்தில் இருந்து இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப்பட்ட ஆய்வு மேர்க்கொண்டுவரும் பார்வை மாற்றுத்திறனாளி ஸ்ருதி வெங்கடாசலம் பங்கேற்று, பன்னாட்டுச் […]
பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் முதல் மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் – ஏப்ரல்-2020! பேரிடர் காலங்களில் ஊனமுற்றோர் உரிமைகளும், உண்மை நிலையும்! 19 ஏப்ரல் 2020, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை. நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர்,உங்கள் திறன் பேசி அல்லது கணினியில் Zoom செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். கூகுல் ப்லே ஸ்டோரில் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் விண்டோசுக்கான செயலியைத் தரவிறக்க இங்கே சொடுக்குங்கள் செயலியைத் திறந்தால், join meeting என்ற இடத்தில் சொடுக்கினால், உங்கள் பெயர் […]
நன்றி விகடன்.com: மாற்றுத் திறனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று நிதி உதவி! – நெகிழ வைக்கும் நலச் சங்கத்தின் முயற்சி தமிழகத்தின் பல மாவட்டங்களில் வருமானமின்றி தவித்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்கின் விவரத்தை எங்கள் குழுவில் உள்ளவர்கள் மூலம் பெற்று அவர்கள் உண்மையான மாற்றுத்திறனாளிகள்தானா என்பதை அறிந்து அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வீதம் அனுப்பி வைத்தோம். கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்காக, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர் சமூக வலைதளங்கள் மூலம் […]
Anne Sullivan Macy படக்காப்புரிமை afb.org அது கடந்த கல்வியாண்டின் தொடக்கமான ஜூன் மாதத்தின் ஏதோ ஒருநாள். பரபரப்பான பள்ளி சேர்க்கை என்றெல்லாம் பொய்சொல்ல மாட்டேன். சிறப்புப் பள்ளிகளில் சேர்க்கையைப் பொருத்தவரை, மாதத்திற்கு ஒரு குழந்தை வந்தாலே அதிகம். அப்படித்தான் ஒரு தாய் தன் குழந்தையைத் தோளில் போட்டபடி எமது பள்ளிக்கு வந்தார். குழந்தையின் பெயர் தமயந்தி. விசாரித்ததில் தாயின் நிலைமைக்குத்தான் அந்தப் பெயர் மிகவும் பொருத்தம் என்று தோன்றியது. குழந்தைக்குக் காதும் கேட்காது, கண்ணும் தெரியாது. […]
கரோனா பேரிடர் காலத்தில், மாற்றுத்திறனாளிகள் பல புதிய சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால், வேறு எவரையும்விட அவர்களுக்கு அதிக கவனமும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. அவர்கள் உணவு உட்கொள்ளாமல் இருக்கக்கூடும், தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை சரியாக அறிந்துகொள்ள இயலாதபோது, அவர்கள் மன அழுத்தத்தோடு காணப்படுவார்கள். எனவே, அரசும் அவர்களுக்காகச் செயல்படும் அமைப்புகளும் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை அவர்களுக்கு உரிய வடிவத்தில் (accessible format) கொண்டுசேர்க்க வேண்டும் என ஹைதராபாத்திலுள்ள இந்திய பொதுசுகாதார […]
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் கரோனா ஊரடங்கு காரணமாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவும் பொருட்டு இலவச அழைப்புமையம் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அழைப்பு மையத்திற்கு கடந்த சனிக்கிழமை இரவுவரை 15328 அழைப்புகள் வந்திருக்கின்றன. இது குறித்துப் பேசிய துறை அதிகாரிகள், “அர்ப்பணிப்பு மிக்க 42 நபர்களைக்கொண்டு நிர்வகிக்கப்படும் இந்த அழைப்பு மையத்தின் மூலம் பெறப்படும் அழைப்புகள் உரிய வடிவில் மாற்றப்பட்டு, தொடர்புடைய மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரின் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன” என்றனர். […]
கல்லுப்பட்டி முதல் கலிஃபோர்னியா வரை, “அன்புத் தோழமைகளே!” என்கிற எங்களின் ஒற்றை மன்றாட்டிற்குச் செவிசாய்த்து, பார்வையற்றோர் சமூகத்தின் துயர்துடைக்க நீண்டுகொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான கரங்களை மானசீகமாய்ப் பற்றிக்கொள்கிறோம். உறுதிச் சான்று கேட்பதில்லை, உளச்சான்றே சாட்சி, எவ்விதப் புகைப்படமும் இல்லை, அன்பின் மன வரைபடம் கொண்டு தேடித் தெரிவு செய்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை களப்பணி ஏதுமின்றி தொழில்நுட்ப உதவியுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து வருகிறோம். கனத்த மனதைத் தந்துவிட்டுப் போகிற சில […]
