Categories
white cane day

அக்டோபர் 15 உலக வெண்கோல் தினம்

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

graphic வெள்ளை ஊன்றுகோல் பிடித்து நடந்து செல்லும் பார்வையற்றவர்

பார்வையற்றோர் பயணத்தின் வழிகாட்டி; பள்ளம் மேடுகள் உரைக்கிற உற்ற தோழன்
அன்பார்ந்த பொதுமக்களே, சக பயணிகளே!
நீங்கள் பயணிக்கிற சாலைகளில் வெண்கோல் பிடித்த பார்வையற்றவரை எதிர்கொண்டால், கண்டும் காணாததுபோல் அமைதியாகக் கடந்துவிடாமல், அவரை அணுகி, அவர் சாலை கடக்க உதவுங்கள். இவ்வாறு செய்வதில் எந்தவிதத் தயக்கமோ, கூச்சமோ, அச்சமோ கொள்ளாமல் அதனைத் தன்னைப் போன்ற சக மனிதருக்கு ஆற்ற வேண்டிய கடமையாகக் கருதுங்கள்.
பார்வையற்றவருக்கு சாலையைக் கடக்க உதவும்போது, அவரின் கையைப் பற்றி, நீங்கள் இரண்டு அடிகள் அவருக்கு முன் நடந்தவாறு அழைத்துச் செல்லுங்கள். வெண்கோலின் ஒரு முனையைப் பிடித்து அழைத்துச் செல்வது, முதுகைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு  செல்வதுபோன்ற செய்கைகளைத்  தவிர்ப்பதன் மூலம், அவருடைய கண்ணியமான பெருமிதப் பயணத்தை நீங்கள் உறுதி செய்கிறீர்கள்.
வெண்கோலின் உதவியுடன் நடந்து செல்லும் பார்வையற்றவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நில்லுங்கள்.
வாகனங்களில் செல்வோர், வெண்கோளுடன் எதிர்படும் பார்வையற்றவரின் நலன்கருதி, வேகத்தைக் குறைத்து அவர் பாதுகாப்பாக சாலையைக் கடக்க உதவுங்கள்.
இடது வலது பக்கங்கள் சொல்லி, நடந்து செல்லும் பார்வையற்றவரை நெறிப்படுத்த விரும்புவோர்,  தங்களின் இடது, வலது பக்கங்களைச் சொல்வது தவறு. பார்வையற்றவரின் இடது வலது பக்கங்களைச் சொல்வதே சரியான முறையாகும்.
பாதுகாப்பான  பயணம் நம் ஒவ்வொருவரின் உரிமை. அதைப் பார்வையற்றவருக்கும் உறுதி செய்வது நம் அனைவரின் கடமை.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.