மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திருமதி. B. மகேஸ்வரி, நில சீர்திருத்தத் துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் புதிய ஆணையராக திரு. ஜானி டாம் வர்கிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 24ஆம் தேதி, திருமதி. B. மகேஸ்வரி இ.ஆ.ப. அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளைச் சந்திப்பதில்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ஐ அமல்படுத்துவதில் மெத்தனமாகச் செயல்படுகிறார் என அவர்மீது மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் தொடர்ந்து அதிர்ப்தி தெரிவித்ததோடு, அவருக்கு […]
Month: Sep 2019
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஆசிரியர் பாஸ்கர், முதல்நாள் நடத்திய பாடத்தில் இருந்து மாணவியிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாணவி சரிவர பதிலளிக்காததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் பாஸ்கர், மாணவியின் இடது கையில் கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு […]
மு.யுவராஜ் சென்னை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்தாத தால் பார்வையற்ற மாற்றுத்திற னாளி தேர்வர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, விஏஓ, ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக எழுத்தர் நியமிக்கப்படுகிறார். தேர்வில் எழுத் தர் கேள்விகளை படித்துக் காட்டி தேர்வர் அளிக்கும் பதில்களை எழுதுவார். இந்தச் சூழலில், எழுத்தர் நிய மனத்தில் மத்திய […]
குருபிரசாத்குரலற்றவர்களின் குரல்…தி.விஜய் கோவை, சாடிவயல் பகுதியில் உள்ள கோவைக் குற்றாலத்தில் (Eco Tourism) அறிவிப்பாளராகப் பணிபுரிந்துவருகிறார் அய்யாச்சாமி என்ற பழங்குடி இளைஞர். அய்யாச்சாமி “சுற்றுலாப் பயணிகளின் கனிவான கவனத்துக்கு… இடது பக்கம் யாரும் போகக்கூடாது. அது வனப்பகுதி. சோப்பு, ஷாம்பு எல்லாம் பயன்படுத்தக் கூடாது. உங்க பொருள்களை எல்லாம் பத்திரமா வெச்சுக்கோங்க” ஆர்ப்பரித்துக் கொட்டும் சிறுவாணி நீர்வீழ்ச்சிக்கு மத்தியிலும் கணீரென்று ஒலிக்கிறது அய்யாச்சாமியின் குரல். கோவை, சாடிவயல் பகுதியில் உள்ள கோவைக் குற்றாலத்தில் (Eco Tourism) அறிவிப்பாளராகப் […]
அருண் சின்னதுரைசாய் தர்மராஜ்.ச “எத்தனை முறை கீழே விழுந்தாலும் பயப்பட மாட்டார். அவரின் தன்னம்பிக்கைதான் அவரை இந்த அளவு உயர்த்தியிருக்கிறது” என்று நெகிழ்கிறார் நசிமா.ஜாகிர் உசேன் கறிக்கடையில் ஆள்காட்டி விரலின் உதவியால் எடை போட்டுக்கொண்டி ருந்தார் ஜாகிர். கையால் எண்ணிய பணத்தை, வாயில் வைத்து அடுக்கிக் கொள்கிறார். 10 ரூபாய் முதல் 2000 வரை உள்ள நோட்டுகளை மதிப்பு வாரியாகப் பிரித்துக்கொண்டார். கல்லாப் பெட்டி அடையாளத்திற்கு, தனது இடது கால் அருகே சிறிய கல் வைத்திருக்கிறார். வெட்டுக்கட்டை […]
ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் கரூர் லயன்ஸ் சங்கம்(சக்தி) இணைந்து நடத்திய சிறப்பாசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமை வகித்து பேசியபோது, “சிறப்பாசிரியர் பணி சிறப்பான பணியாகும். மாற்றுத் திறனுடையோருக்கு நல்ல நிலையில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். விபத்தில் இறப்பவர்களின் கண்களை தானமாகக் கொடுக்க அவர்களின் குடும்பத்தினர் முன்வர […]
மாற்றுத்திறனாளிகள் வழக்கு: சென்னை:அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வரும் 26ம் தேதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் காலேஜ் ஸ்டூடன் அண்ட் கிராஜுவேட் அசோசியேசன் ஆப் தி பிளைண்ட் உள்ளிட்ட சங்கங்களின் சார்பாக மணிக்கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் […]
புதுக்கோட்டை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்.4) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். இதில், 74 கோரிக்கை மனுக்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் […]
