ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், முதல்வர் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக சிறப்பான பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பார். அதன்படி இந்த ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தை களுக்காக சென்னை சாந்தோமில் இன்ஃபினிட்டி பூங்கா அமைத்த சென்னை மாநகராட்சி பூங்கா துறைக்கு நல் ஆளுமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலன்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டுநிறுவனத்துக்கான விருது வேப் பேரி ஆபர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக் கான பள்ளிக்கு வழங்கப்பட்டது. சிறந்த மருத்துவர் விருது கோவை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை நிறுவன இயக்குநர் செ.வெற்றிவேல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வீ.ரமாதேவி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எவரெஸ்ட் ஸ்டெபிலைசர் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
