நாட்டில் புழங்கும் ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் வடிவம் உள்ளிட்ட தன்மைகளை ஏன் அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்கிறீர்கள்? காரணம் என்ன என்று மத்திய ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதாவது சில வேளைகளில் ரூ.50 புதிய நோட்டுக்கும், ரூ.100க்கும் சட்டென்று வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது. 5 ரூபாய் நாணயத்திற்கும் 1 ரூபாய் நாணயத்திற்கும் சில வேளைகளில் வித்தியாசம் இல்லாமல் போய் விடுகிறது, இதனால் பார்வையற்றோருக்கு கடும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் பொதுவாக தடவிப்பார்த்துதான் நோட்டுகளை கடைகளிலோ ஹோட்டல்களிலோ கொடுக்கின்றனர், வாங்குகின்றனர். அடிக்கடி அதன் உருவம், தன்மையை மாற்றிக் கொண்டேயிருந்தால் அவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் மிகவும் கடினமாக உள்ளது. மேலும் அவர்கள் ஏமாற்றப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ரஜோக் மற்றும் நீதிபதி ஜாம்தார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதனால் ஏற்படும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி பார்வையற்றோர் தேசியக் கூட்டமைப்பு கோர்ட்டில் செய்த மனு மீதான விசாரணையில் நீதிமன்றமே ஆர்பிஐக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தலைமை நீதிபதி, எழுப்பிய கேள்வியில், “ரூபாய் நோட்டுகள், நாணயங்களின் அளவு, வண்ணம், தன்மை ஆகிய உருவங்களை அடிக்கடி மாற்ர வேண்டிய கட்டாயம் என்ன என்பதை நாங்கள் ஆர்பிஐ-யிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறோம்” என்றார்.
மேலும் உலகில் வேறு எந்த நாடும் தங்கள் நாட்டு பணத்தினை இஷ்டத்திற்கு மாற்றுவது இல்லை.
ஆனால் பார்வையற்றோருக்காகவென்றே புதிய நாணயங்கல் சிறப்பு அம்சங்களுடன் மார்ச்சில் வெளியிட்டதாக கோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிபதிகள் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி 6 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

