“மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஐ முறையாக அமல்படுத்திட, சிறப்பு ஆணையரை நியமிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோட்டை முற்றுகைப் போராட்டம் தலைமைச்செயலரின் சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. கடந்த 29.ஆகஸ்ட்.2019 அன்று நடைபெற்ற போராட்டமும் அதற்குப் பிறகான கைது நடவடிக்கைகள் குறித்து பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. கோட்டையை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளை இடைமறித்துக் கைது செய்த காவல்த்துறையினர் அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு […]
Month: Aug 2019
நன்றி இந்து தமிழ்த்திசை சென்னை மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாற் றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரி யத்தின் மேலாளர் மஞ்சு பிரியா கூறியதாவது: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் 7 ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தைச் சேர்ந்த வீரர் களை மும்பையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அகில இந்திய […]
கர்ண வித்யா தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான திறன் வளர் பயிற்சியை நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக Hr executive, data analyst, computer instructor, accessibility tester and customer supports போன்ற பதவிகளுக்கான பயிற்சியை வழங்கி அதில் சிறப்பாக செயல்படுபவர்களை பணியில் அமர்த்துகிறது. இந்தப் பயிற்சியானது அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயின்று பணியில் அமர்ந்த நண்பர்களின் சில துளிகள். மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளவும் விவேக் 7092877688 இ-மெய்ல் kvf.mobilizer@gmail.com Venue; […]
நன்றி இந்து தமிழ்த்திசை 21.ஆகஸ்ட்.2019மு.யுவராஜ் சென்னை சாதாரணப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பிரெய்லி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை யான மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்காக 10 அரசு சிறப்பு பள்ளிகள் பிரத்யேகமாக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகள் […]
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 10 செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் கடந்த ஆண்டே நியமிக்கப்படவிருந்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் அது தடைபட்டுவிட்டது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் அமைக்கப்பட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் முயற்சியால், தற்போது செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.வெளியிடப்பட்டுள்ள பணிமூப்புப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அவை […]
ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும், முதல்வர் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக சிறப்பான பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பார். அதன்படி இந்த ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தை களுக்காக சென்னை சாந்தோமில் இன்ஃபினிட்டி பூங்கா அமைத்த சென்னை மாநகராட்சி பூங்கா துறைக்கு நல் ஆளுமைக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலன் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டுநிறுவனத்துக்கான விருது வேப் பேரி ஆபர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக் கான பள்ளிக்கு வழங்கப்பட்டது. சிறந்த மருத்துவர் விருது கோவை முடநீக்கியல் மற்றும் […]
புதிய கல்விக்கொள்கை வரைவு 2019ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி குறித்தோ, சிறப்புப் பள்ளிகள் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை. உள்ளடங்கிய கல்வியை அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குமான ஒரே தீர்வாக வைக்கிற புதிய கல்விக்கொள்கையின் வரைவை மிகக் கடுமையாக எதிர்க்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். எனவே, எமது சங்கமானது, புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்தான தனது கருத்துகளைத் தொகுத்து அதனை நடுவண் அரசிற்கு அனுப்பியிருக்கிறது. எங்களின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கீழே இருக்கிற தொடுப்பைக் க்லிக் செய்து […]
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளுக்கு மாறாக பல்வேறு வகைகளில் வினையாற்றும் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எமது கூட்டியக்கம் கடந்த ஜூலை-10 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. அந்நிலையில், ஜூலை-4 ஆம் தேதி தலைமை செயலகத்தில் எமது கூட்டியக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாநில சமூகநலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில் சிறிது கால அவகாசம் […]
நன்றி தமிழ் இந்து இணையதளம்: மு.யுவராஜ் சென்னை நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை. இதனால், கணினி தொடர்பான கல்வியை பெற முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 21 அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது. […]
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களை உள்ளடக்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதிவரை சுமார் 20 நாட்கள் மாற்றுப்பணியில் ஆணையரகம் சென்று கோரிக்கைகள் தொடர்பான நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவார்கள் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 21 அரசு சிறப்புப் பள்ளிகள் […]
