மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு
நன்றி இந்து தமிழ்த்திசை
சென்னை
வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின்போதும், மாற்றுத்திற னாளிகள் வாக்களிப்பதற்கு வசதி யாக வாக்குப்பதிவு மையங்களில் சாய்வுதளம் அமைப்பது, இரு சக்கர நாற்காலிகள், பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட வசதிகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை யான வசதிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், மாற்றுத்திறனாளி கள் எந்த சிரமமும் இன்றி, சுலபமாக வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க தேவை யான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுவதை உறுதிப்படுத்த வேண் டும் என்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் எந்த சிரமமும் இன்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் வாக்குப்பதிவு மையங்களில் வசதிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.
வசதிகள் மேற்கொள்ளப்பட் டதைக் கண்காணித்து உறுதிப் படுத்த வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. சாய்வுதளம், பிரெய்லி வாக்குப்பதிவு இயந்திரம், இருசக்கர நாற்காலிகள், போக்கு வரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.