நன்றி இந்து தமிழ்த்திசை
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசுப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று கணினி வழங்கினார்.
புதுக்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் அரசு நடுநிலைப் பள்ளியில் 43 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு, அண்மையில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜாவிடம் தங்களுக்கு கணினி வாங்கித் தருமாறு மாண வர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனது சொந்த செலவில் ஒரு கணினியை வாங்கி நேற்று அப்பள்ளிக்கு வழங்கினார். கணினி வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜாவை பார்வையற்ற மாணவர்கள் பாராட்டினர். பள்ளித் தலைமை ஆசிரியர் விசித்ரா, ஆசிரியர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

