நன்றி இந்து தமிழ்த்திசை நாளிதழ் 08.மார்ச்.2019.
நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடம் பிரெய்லி முறையிலான வாக்காளர் விழிப்புணர்வு புத்தகத்தினை ஆட்சியர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்
வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இடம் பெற செய்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்துப் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேரடி செயல் விளக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனை வரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 180 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அவர்களின் முகவரிக்கு தேர்தல் பணியாளர்கள் நேரில் சென்று அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா, வாக்காளர் அடையாள அட்டை பெற்றிருக்கின்றாரா என அறிந்து வாக்காளராக பதிவு செய்யவும், அடையாள அட்டைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள பிரெய்லி முறையிலான வாக்காளர் விழிப்புணர்வு புத்தகத்தினை வாசித்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து தெரிந்து கொள்வதுடன், மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் எடுத்துரைத்து அனைவரும் வாக்களிக்க செய்ய வேண்டும். அனைத்து வாக்குசாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதான வர்களின் பயன்பாட்டிற்காக சாய்வுதளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமார், தேர்தல் வட்டாட்சியர் ப.சுப்பிரமணியம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
