பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் மின்னிதழான விரல்மொழியரின் கலைஞர் சிறப்பிதழ், கலைஞரின் நினைவிடத்தில் வைத்து அவருக்குப் புகழ்வணக்கம் செய்யப்பட்டது.
ஆர்வமுள்ள ஆறு பார்வையற்ற பட்டதாரி இளைஞர்கள் இணைந்து, பார்வையற்றோரின் வாழ்வியலைப் பதிவு செய்யும் நோக்கில் துவங்கப்பட்டதுதான் மாதாந்திர மின்னிதழான விரல்மொழியர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் திரு. கலைஞர் அவர்களின் மறைவை ஒட்டி, தங்களது ஆகஸ்ட் மாத மின்னிதழை கலைஞர் சிறப்பிதழாக வெளியிட்டனர்.
இணையத்தில் மட்டுமே பலராலும் படிக்கப்பட்ட கலைஞர் சிறப்பிதழை கடந்த டிசம்பர் 3 2018 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று, அச்சிலும் பிரெயில் வடிவிலும் வெளியிட்டனர். திராவிடம் 2.0 மேடையில், திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்கள் வெளியிட, திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் பொதுச்செயலாளர் திரு. சுபவீ அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று (28.12.2018) விரல்மொழியரின் கலைஞர் சிறப்பிதழ் அச்சுப் பிரதியை அவரது நினைவிடத்தில் வைத்து அவருக்குப் புகழ்வணக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், விரல்மொழியர் ஆசிரியர்க்குழுவைச் சேர்ந்த ப. சரவணமணிகண்டன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர்.
*
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.








