தொடுகை மின்னிதழைத் தொடர்ந்து செலுத்திட, உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கமும், உளம் திறந்த ஒத்துழைப்பும் எங்களுக்குத் தேவை. நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆக்கங்களால் இதழைச் செறிவுடையதாக, பன்முகத்தன்மை கொண்டதாக மிளிரச் செய்ய முன்வர வேண்டும்.
இதழில், பார்வையற்ற தோழர்கள், வரலாறு, கலை, இலக்கியம், சமகாலம், சமையல் என என எதுகுறித்தும் எழுதலாம்.
பார்வையுள்ள தோழர்கள், பார்வையற்றவர்கள் பற்றி மட்டுமே எழுதிட வேண்டும்.
எழுத்து தவிர, இணையதள வடிவமைப்பு, கட்டுரைகளை மெய்ப்பு பார்த்தல், வெளியாகும் கட்டுரைகளை ஒலிக்கோப்புகளாக மாற்றுதல், ஒலிக்கோப்புகளைக் கேட்டு படைப்புகளைத் தட்டச்சு செய்து தருதல், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வழிகளில் எங்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றலாம்.
ஆகவே, வாருங்கள் நண்பர்களே!
தொடுகையால் தோழமை கொள்வோம்,
தோழமையால் துயர்களை வெல்வோம்.
இதழிலிருந்து
- அணுகல் வசதியுடன் கூடிய ஓடிடி வெளியீடுகள்: நடுவண் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சொல்வதென்ன?
- நடுவண் பட்ஜெட் 2026: மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான ஒதுக்கீடு எவ்வளவு?
- தொழில்நுட்பம்: WhatsApp Desktop Enhancer
- சிந்தனை: விரிசல் வெளிச்சமும், விட்டில் பூச்சிகளும்!
- தேர்தல் களம்: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் பார்வை மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் என்னென்ன?
