எங்கள் விதிமுறைகள் மற்றும் கொள்கைகள்

பார்வை மாற்றுத்திறனாளிகள் பிற மாற்றுத்திறனாளிகளோடும், பொதுச்சமூகத்தோடும் மேற்கொள்கிற ஆக்கபூர்வமான உரையாடல்களின் களமாக இயங்குவதையே தொடுகை தன் ஒற்றை நோக்கமாக வரித்துக்கொண்டிருக்கிறது. எனவே, ஆரோக்கியமற்ற தனிப்பட்ட காழ்ப்புகள், வெளியிடவே ஒவ்வாத வசைகளுக்கு ஒருபோதும் தொடுகையில் இடமில்லை.

தொடுகை தளத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் எந்த ஒரு பொருண்மையின் கீழும் தங்கள் படைப்புகளைத் தரலாம். அதேசமயம், பிற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி அல்லாதவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய பொருண்மைகளில் மட்டுமே எழுத வேண்டும்.

தொடுகை இணையப் பக்கம் உள்ளிட்ட அதன் முகநூல், ட்விட்டர், யூட்டூப் போன்ற சமூக தளங்களில் வெளியிடப்படும் கட்டுரைகள் மற்றும் காணொளிகளில் இடம்பெறும் கருத்துகள் மற்றும் தகவல்களுக்கு தொடர்புடைய அவற்றின் படைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும். தொடுகை எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

தளத்தில் வெளியாகும் படைப்புகளைத் திருத்தங்கள் செய்யவோ, நிராகரிக்கவோ, பகுதி அளவிலோ அல்லது முழுமையாக நீக்கிவிடவோ தள ஒருங்கிணைப்புக்குழுவுக்கு முழு உரிமை உண்டு.

தொடுகை தளத்தில் வெளியாகும் படைப்புகளைப் பகிரும்போது, அவற்றிற்கான இணைப்பையும் இணைத்துப் பகிர்வது கட்டாயம்.