# கவிதை: உள்ளத்தின் ஒளி

- Link: https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/
- Published: 2026-10-08T06:03:13+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

காணாத காட்சிகள் கற்பனையில் மலரும்,

கடலின் பரப்பும் மனத்திரையில் விரியும்;

ஆனையின் உருவமும் அருவியின் ஓசையும்

அன்பின் உணர்வில் அழகாய்த் திகழும்.

மரங்களின் மணமும் மலர்களின் வாசமும்,

இலைகளின் தீண்டலும் இனிமை தரும்;

பறவையின் குரலில் சிறகுகள் விரிந்து,

புதியதோர் உலகம் நெஞ்சில் பிறக்கும்.

தொட்டுணர்ப் புள்ளிகள் அறிவைத் திறக்கும்,

விரல்களின் வழியே வெளிச்சம் பெருகும்;

கற்பனைச் சிறகுகள் வானை அளக்கும்,

கனவுகள் யாவும் கரை சேரும்.

கை கோர்த்துத் தூக்கிடும் நல்லுள்ளங்களும்,

ஊக்கமும் அன்பும் தருபவரும் உண்டு;

தோளோடு தோள்நின்று தோழமை காட்டும்

தூயநல் நெஞ்சங்கள் எங்களுக்கோர் பலமாம்.

சிலரின் சொற்கள் மனதைப் புண்படுத்தும்,

குறை காணும் பார்வை மாறிட வேண்டும்;

எவரும் எவருக்கும் தாழ்ந்தவர் இல்லை—

எல்லா உயிர்க்கும் சம உரிமை உண்டு.

கண்கள் காணும் எல்லை கடந்தும்

கற்பனை உலகம் விரிந்தே கிடக்கும்;

உள்ளத்தின் ஒளியை ஏந்தி நடந்தால்

உயரங்கள் யாவும் அருகில் வரும்.

***இந்திராஸ்ரீ

கவிஞரும் எழுத்தாளருமான திருமதி. இந்திராஸ்ரீ அவர்கள் ஒரு குறைப்பார்வை மாற்றுத்திறனாளி.
பார்வையற்றோர் அதிகம் புழங்கும் பல டெலகிராம் குழுக்களில், கவிதைகள், சிறுகதைகள், பயணக்
கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

தொடர்புக்கு: [indrasree007@gmail.com](https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/indrasree007@gmail.com)

பேச: 9840863828

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/?subject=%5BShared%20Post%5D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%3A%20%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF&body=https%3A%2F%2Fthodugai.in%2F2026%2F10%2F08%2Fpoem-by-indrasree%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2026/10/08/poem-by-indrasree/?share=telegram)

Like Loading…

### _Related_
