பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் போராட்ட அறிவிப்பு.

CSGAB போராட்டக்களம்: நாள் பதினொன்று

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் உண்ணாவிரதம் மற்றும் தொடர் போராட்ட அறிவிப்பு.

நாள் (11): 22/2/2024.

நேரம்: காலை. 10.30.

சென்னை கடற்கரை இரயில் நிலையம் அருகே உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மணு அளித்தல்.

தொடர்புக்கு: 9382804040, 7449158045, 7904881610.

அனைவருக்கும் வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உரிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். தீவிரமாக நடை பெற்று வரும் நம் போராட்டத்தில் பணியில் உள்ளோரும், பணி நாடுனர்களும், மாணவர்களும் பெருந்திறளாகக் கலந்துகொண்டார்கள். 

கிட்டத்தட்ட 4 மாவட்டங்களில், சென்னையில் 2 இடங்களில் நம் போராட்டங்கள் இன்று களம் கண்டன. அலைகடலெனத் திரண்ட நம் கூட்டத்தையும் ஆற்பரிப்பையும் கண்டு அதிர்ந்தது தமிழகம்.

 எனினும் அரசின் அச்சுருத்தல்கள் தொடர்ந்தன. மாணவர்களுக்கு அரசு விடுதிகளும் தொல்லைகள் தரத் துனிந்ததன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு அரசு விடுதியில் உள்ள 19 மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். காலை 4 மணி அளவில் சென்ற காவலர்கள் மற்றொரு விடுதியில் அத்துமீரி நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற மாணவர்களைக் கூண்டோடு கைது செய்ய முயன்றனர். பார்வையற்றோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களை எல்லாச் சாலைகளிலும் பின் தொடர்கிறார்கள் காவலர்கள். 

இது ஒரு புறமாக, இன்று 2 முறை நம் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் மாண்பு மிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர். அவரைச் சந்தித்து, 9 அம்சக் கோறிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல வகையில் வற்புறுத்தியதன் பேரில் தற்போதைக்கு 3 வருகை விரிவுரையாளர் பணி வழங்குவதாகக் கூறி, ஜூலை வரை போராட்டத்தினை ஒத்திவைக்கும்படி நிர்பந்தித்தார். அதனை உண்ணாவிரதத் தியாகிகளும் சங்க நிர்வாகிகளும் ஏற்க மருத்த நிலையில் போராட்டம் தொடர்கிறது.

அதே நேரத்தில் காலையில் சாலை மரியல் செய்த நம் சகோதரப் போராளிகளை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் சட்டைகளைக் கிழித்தும் அராஜகம் செய்ததோடு, நம் சங்கத்தின் பெண் உறுப்பினர்களை ஆண் காவலர்கள் அநாகரீக முறையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பார்வையற்றோரை, மாலை விடுவிப்பதிலும் தாமதப் பட்டதால் பெண்கள் மிகவும் இன்னலுற்றனர். இப்படிப்பட்ட அச்சங்களால் நம் போராட்டத்தின் வலிமை குன்றும் என ஆள்வோர் நினைக்கிறார்கள். இல்லை இல்லை எங்கள் பலமே ஒற்றுமை என்பதனை உரக்கச் சொல்லவும், கோரிக்கைகளை வென்றெடுக்கவும் உரிமைகளை மீட்கவும் தமிழகமெங்கும் உள்ள பார்வையற்ற சமூக உறவுகள் பெறும் திரளாக கலந்து கொண்டு இந்த தொடர் போராட்டத்தை வெற்றி போராட்டமாக மாற்ற வாருங்கள் வாருங்கள் என்று உங்களை சங்க செயற்குழு மற்றும் போராட்டக் குழு இருகரம் கூப்பி அழைக்கிறது. பயத்தை மரைக்க, எதிரியை அச்சுறுத்துவது இப்போதைய அரசின் குணம் போலும்! அச்சமே நம்மைக்கண்டு அச்சம் கொள்ளும் என ஆற்பரித்துச் சொல்ல வாருங்கள் தோழர்களே!

வேலை வாய்ப்பு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினை நம் சங்கம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க எவ்வளவு வேலைகள், எவ்வளவு கனிவுகள்! 

பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?

இந்தப் போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!

வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!

உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!

 போராட்டம் வென்றிடுவோம், 

வெற்றி வாகை சூடிடுவோம்.

கவிதை: [முத்துராஜா மதுரை:

கண்கள் தெரியவில்லையோ கண்டெடுத்த அரசிற்கு எங்கள் கண்ணீர் புரியவில்லையோ

கலைஞர் புகழ் அரசிற்கு.

நெஞ்சம் குமுறும் நிகழ்காலம்,

எங்கே எங்கள் எதிர்காலம்.

பிச்சை கேட்கவில்லை உங்களிடம் நாங்கள்

எங்கள் உரிமை கேட்க வந்தோம்.

உறவுகளை வாங்க எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொன்னால்

காவல் துறையினரும் அடிப்பிங்களோ மன்னரையும்!

பின்னால் எட்டி உதைக்கும் காலிற்கு தெரியவில்லையோ

பட்டப்படிப்பு படித்த ஆசிரியரின் மதிப்பு.

ஓங்கி அடிக்கும் கைகளுக்கு தெரியலையோ

உரிமை கேட்கும் பார்வையற்றோர் மதிப்பு.

எட்டடுக்கு பாதுகாப்பில் கோட்டையிலே அமர்ந்திருக்கும்

அமைச்சருக்கு புரியலையா

பட்டினியை கிடக்கும் எங்கள் பட்டதாசிரியர் வேதனை.

சொல்லாததையும் செய்வோம் என்று

சொல்லிய சொல் எங்கே போச்சுதயா? உங்கள் போதனை?

விடியல் ஆட்சி என்று வெரசாக வந்தீங்களே

விடியலத்தான் காணோமே இதுதான் எங்கள் வேதனை.

ஊடக சந்திப்பு. 

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் கடந்த 12நாட்களாய் பார்வையற்றோர்களுக்கான பணி வாய்ப்புகள் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து. தொடர் உண்ணாவிரதம், போராட்டம் ஆகியவைகளை நடத்தி வருகின்றது. இவைகள் தொடர்பாக 2முறை சமூக நலன், சத்துணவு மற்றும் மகளிர் உரிமை வழங்கல் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதனைத் தொடர்ந்து நேற்றைய பொழுது அமைச்சர் அவர்கள் உண்மைக்கு புறம்பான சில செய்திகளை ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்கள். இவற்றை குறித்து விளக்கும் பொறுட்டு, இன்று மதியம் 2 மணி அளவில் எங்களது சங்க அலுவலகத்தில் (college students and graduate association of the blind, number 58, takkar Baba vidyalaya campus, Venkat Narayana road, t Nagar, Chennai-17.) ஊடக சந்திப்பினை நடத்த இருக்கின்றோம் என்பதனை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைத்து ஊடக நண்பர்களும் வந்து கலந்துக் கொண்டு, பேச்சுவார்த்தையில் நிகழ்ந்ததை தெளிவாக அறிந்து, உலகிற்கு சொல்லுமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம். நன்றி.

பொதுச் செயலாளர் 

ரூபன்

தொடர்புக்கு: 7904751694.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க போராட்ட வீரர்களே!

 எல்லாம் இழந்து விட்டோம் எஞ்சிஇருப்பது உயிர் மட்டுமே என்கிற கொதிப்பில் தமிழகமெங்கும் தன் எழுச்சியுடன் கூடி போராடும் எமது பார்வையற்ற சமூக உறவுகளே! 

மூன்று முறை அரசு பேசியும் கூட வேலை உத்தரவாதம் தரவில்லை நாம் சிந்திய உதிரத்திற்கு சிரிதும் அர்த்தம் இல்லை!

வாழ வழியற்ற நிலையில் சாலைகளை மரித்து முழங்கியும் கூட அரசின் இதயம் ஏனோ கரையவில்லை! 

அமைச்சர் சகிதம் என நமது பத்து நாள் பட்டினி சீடர்களை சந்தித்தும் கூட சலனப்பட்டதாக தெரியவில்லை! 

மாநிலம் எங்கும் எண்ணிலடங்கா கூட்டம் ஏராளம் திரண்டு அரசின் கவனம் ஈர்த்த போதும் அதன் கள்மணம் கலங்கவில்லை!

தகுதிகளுடன் பார்வையற்ற வியாபாரிகள் வீதிக்கு வந்து ஒப்பாரி வைத்தும் கூட சமூகநீதி அரிதாரம் பூசிய அரசுக்கு நம் உரிமை அதிகாரம் தர விருப்பமில்லை!

நீங்கள் வேண்டுமென்றால் போராடிக் கொள்ளுங்கள் என பொறுப்பற்று சொல்லிவிட்டு புறப்பட்ட அரசை அப்படியே விடுவதா? 

நம் பேர் எழுச்சியை தொடர்ச்சியாய் அதிர்ந்து எடுத்துக்காட்டி நம் போர்குணம் யாதென சொல்வோம் சிந்தாமல் சிதறாமல் அனைத்து கோரிக்கையும் வெல்வோம்! 

நமது போராட்ட யுக்தியை மாற்றி நமது பெரும் சக்தி யாதென காட்டுகிற நேரம் வந்துவிட்டது அன்பு உறவுகளே!

பட்டினியாய் இருப்பதை வேண்டுமென்றால் நிறுத்திவிட்டு பல நாள் போராடிக் கொள்ளுங்கள் என சட்டென்று சொல்லிவிட்டு விருட்டென்று விரைந்து விட்டார் நம் மன வேதனை உணராத அமைச்சர் அம்மா அவர்கள்!

அன்னையின் வழி நடக்கும் என் ஆருயிர் சமூகமே அலை கடலென திரண்டு வா!

எதை அலட்சியம் செய்தார்களோ அதையே லட்சியம் என கை கொள்வோம்!

பலர் ஓரிடத்தில் ஒன்று கூடி பட்டினிப் போராட்டம் செய்து நம் பலம் எதுவென மனதீரத்துடன் உணர்த்தி வெல்வோம்! 

புறப்பட்டு வாருங்கள் போராட்டமே வாழ்க்கை என கொண்ட நமது அகிம்சை போர்க்கள வீரனே!

இம்முறை விட்டு விட்டால் இந்த வன்முறை செய்த அரசுக்கு எம்முறையும் நம் போராட்டச் செய்முறை விளங்காது ஆகவே நிரந்தரமாய் நம் அவலம் போக்க ஆவலுடன் புறப்பட்டு வா எமது சமூக உறவே! 

இப்பொழுது புறப்படும் பார்வையற்ற நம் போர்படை வெற்றி வெளிப்படை என்று தெரிந்த பிறகு குடிபுகும் என்கிற குருதி கொப்பளிப்புடன் விரைந்து வா போராட்டத்தை மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடை எனக் கொடுத்த வீர கோத்திரமே! 

வீழ்வது நாமாயினும் வெல்வதே நமது பார்வையற்ற சமூகம் என்பதை மீண்டும் ஒரு முறை வரலாற்றின் ஏடுகளில் ஏற்றுவோம் வாருங்கள் தோழர்களே! 

இதுவரை மாணவச் செல்வங்களும் மற்ற வீர உறவுகளும் கூடி இழுத்து வந்த பொராட்டத் தேர் வடத்துடன் நிற்கிறது,

அதை அழுத்தமாய் பற்றி இழுத்து வெற்றி தேவதையின் கருவறை சேர்க்க நம் உறவுகள் ஒவ்வொருவரையும் இருகரம் கூப்பி அழைக்கிறது நமது சங்கம்!

தொடர்புக்கு : 7449158045

7904881610 

சங்கத்தின் அடுத்த போராட்ட படி நிலை வியூகம்! தொடர் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பும் அழைப்பும்!

அனைவருக்கும் போராட்ட வணக்கம்! தற்சார்பு, சுய மரியாதை, சுய முன்னேற்றம் போன்ற கொள்கைகளை மையமாகக் கொண்டு, பார்வையற்றோரின் உறிமைக்காகவும், வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் சங்கம் நமது சங்கம். 

நம் சங்கம் நடத்தும் போராட்டம் சங்கத்தை வளர்த்தெடுக்க அல்ல, சங்க உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த. 

போராட்டம் என்னும் வித்தூன்றி, எழிட்சி என்ற வேர் பிடித்து, உறுப்பினர்களின் ஒற்றுமை என்ற விழுதுகள் தாங்க ஆலமரமாய் நிற்கிறது நம் சங்கம்.

1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நம் சங்கம் காலம் காலமாக நடத்திய உண்ணா விரதப் போராட்டங்கள் வெற்றிகளை மட்டுமே பெற்று வந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, குறிப்பிடத்தகுந்த வகையில் சங்கம் எதையும் சாதிக்கவில்லை என்பதே நிதர்சனம். அதனால் நம் சமூகத்தில் வேலைவாய்ப்பின்மை பல்கிப் பெருகிவிட்டன. ஆதலால், நம் சுயமரியாதை, சம உறிமை, சமூக ஏற்பு உள்ளிட்ட யாவும் முழுவதுமாக மரக்கடிக்கப்பட்டு விட்டன.

அதனை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 12/02/2024 முதல் நால்வரின் தொடர் உண்ணாவிரதம், சாலை மரியல், காத்திருப்பு உள்ளிட்ட பல் முனை போராட்டங்களை உறிமை மீட்புப் போராட்டங்களாக நம் சங்கம் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கவண ஈர்ப்புப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

 தற்போது வரையிலும் நடைபெற்ற மூன்று பேச்சு வார்த்தைகளிலும் எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை. சாலை மரியலின் போது அடக்கு முறைகளுக்கு ஆட்படும் நம் பார்வையற்ற போராளிகள் பல்வேறு அலைக்கழிப்புகளுக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகின்றனர். தொடர்ந்து மக்கள் சக்தி இவ்வாறு வீணாவதை சங்கச் செயற்குழுவும் போராட்டக்குழுவும் விறும்பவில்லை.

இவ்வளவில் போராட்டத்தினை ஒத்திவைப்பதும் சாத்தியமில்லை. எனவே அடுத்தப் படி நிலைக்கு போராட்டத்தைக் கொண்டு செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

ஏற்கெனவே 11 நாட்களாக உண்ணாவிரதமிருந்து போராடிக்கொண்டிருக்கும் போராளிகளின் நிலையை மனதிற் கொண்டு அவர்களுக்கு பதிலாக விறுப்பமுடைய அனைவரும் தொடர் உண்ணா விரதம் மேற்கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வரைச் சந்தித்து பணி வாய்ப்புகள் உள்ளிட்ட 9 அம்சக் கோறிக்கைகள் நிரைவேறும் வரை தொடர்ந்து போராட தமிழகத்தில் உள்ள அனைத்து பார்வையற்றோர்களையும் வேண்டி விறும்பி அழைக்கிறது நம் சங்கம். 

இந்த போராட்ட வியூகத்துக்கு உறுப்பினர்கள் தரும் ஆதரவைக் கொண்டே போராட்டத்தின் அடுத்த படி நிலைகளை சங்கம் தீர்மானிக்கும். 

300 க்கும் மேற்பட்ட போராளிகள் சேர்ந்து உண்ணா விரதம் இருந்தால் நமது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கும் என நம்புகிறோம். 

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க விறும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய எண்கள்: 7449158045, 7904881610. 

பலவீனத்தை தன் பலமாகக் கொள்ளும் அதிகார வர்கத்துக்கு நம் பலம் எதுவெனக் காட்ட இதைவிட ஒரு தருணம் வேண்டுமோ?

இந்தப் போராட்டத்திக்கு அணிதிரண்டு வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்!

வீருகொண்டு எழும்படி வீரர்ச் சிங்கங்களை விளிக்கிறோம்!

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வரிகளுக்கு பொருள் காண வாருங்கள்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உண்மையை உலகுக்குச் சொல்ல உங்கள் கரங்களை ஒன்று சேருங்கள்!

உருதி மிகுந்த போராட்டமே வேலையைப் பெற்றுத் தரும்!

 போராட்டம் வென்றிடுவோம், 

வெற்றி வாகை சூடிடுவோம்.

கவிதை: அசோக் ஐயப்பன்:

வணக்கம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரே!

“எல்லோருக்கும் எல்லாம் அதுதான் திராவிட மாடல் ஆட்சி”.

சட்டமன்றத்தில் சொல்றீங்க நல்லா

மேஜையை தான் தட்டுறீங்க.

பார்வை மாற்றுத்திறனாளிகள் யாருடைய ஆட்சியில் இருக்கிறோம் சொல்லுங்க சாமி.

போராடும் முன்பே தடுக்குறீங்க.

கேள்வி கேட்டா அடிக்கிறீங்க.

உரிமையை கேட்டா உதைக்கிறீங்க.

எல்லோருக்கும் எல்லாம் மேடை தோறும் சொல்றீங்க.

சொல்வதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம் என்று.

வீர வசனம் பேசுறிங்க.

நீங்க சொன்னது எதையும் இதுவரையில் செய்யலையே சாமி.

நீங்க உங்க போலீஸ வச்சு

எங்களுக்கு செஞ்சத யாருக்கும் சொல்லலையே சாமி.

அப்புறம் எதற்கு வீணா வசனம் பேசுறிங்க.

கேட்காமலே கொடுத்துட்டீங்க உரிமை தொகை மகளிருக்கு.

நாங்க கேட்டும் கொடுக்கலையே எங்கள் உரிமையை எங்களுக்கு.

எங்கள் கூட்டம் குறைவுன்னா.

உங்க வாக்கு அரசியல் கணக்குல.

எங்கள் வாக்கும் இருக்குல்ல.

தேர்தல் இன்னும் வரலன்நா.

நீங்க எங்கள பாக்கல..

ஐயா முதல்வரே இறுதியாக ஒரு கேள்வி?

இதற்கு மட்டும் பதில் சொல்லிடுங்க.

எங்க மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சர் யாரு???

எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் ஆட்சி. S. அசோக் பாலா

பார்வையற்றவன் முகநூல் பதிவு

https://www.facebook.com/share/p/2L75McFK9zrsPA79/?mibextid=oFDknk

L.R. ஜெகதீசன் முகநூல்ப்பதிவு

https://www.facebook.com/share/p/8a2juUC6kYXC1HqA/?mibextid=xfxF2i

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *