நாள்; 12/2/2024.
இடம்: வள்ளுவர் கோட்டம்.
நேரம்; காலை. 09.30.
நமது அமைப்பு கடந்த 10. ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையற்ற சமூகத்தின் கல்வி,
வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி இருபது அம்ச
கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. அதில் பார்வையற்றோரின் சமூக
முன்னேற்றம், வேலை வாய்ப்பை அடிப்படையாக கொண்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற
கோரி, 12/2/2024. திங்கட்கிழமை: உண்ணாவிரத போராட்டம் நடத்த சங்கம் உங்களை
பெரும் திரளாக கலந்து கொண்டு நம் வாழ்வாதார உரிமையை மீட்டெடுக்க வாரீர் என
உங்களை அழைக்கிறது. போராட்டங்கள் பல நடத்தியும் அரசு அதிகாரிகளை நேரில்
சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்விதமான வாழ்வாதார முன்னேற்றமும்
நமக்கு ஏற்படவில்லை. பட்டங்கள் பல பெற்றும் பணி வாய்ப்பு இல்லாமல் அல்லல்பட்டு
கொண்டிருக்கும் நம் சமூகத்தின் உரிமையை மீட்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட
வேண்டிய நேரம் இது. 12/ 2/ 2024. இன்று வள்ளுவர் கோட்டத்தில், நமது சங்கத்தின்
மூலம் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.நமது உரிமையை மீட்க
ஒவ்வொரு பார்வையற்றவரும் போராட்ட உணர்வோடு வாரீர் கோரிக்கைகளை வெல்ல உங்கள்
கரம் கோர்த்து ஆதரவை தாரீர் என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும்
பட்டதாரிகள் சங்கம் உங்களை அன்போடு அழைக்கிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமையே பலம் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பார்வையற்றவரும் தங்களுடைய
வாழ்வில் வேலை என்னும் ஒளி விளக்கை ஏற்றி சுயமரியாதையோடு வாழ உங்கள்
ஒவ்வொருவரையும் இப்போராட்டத்தில் பங்கு பெற வேண்டுமென அன்போடு அழைக்கிறோம்.
தற்போது அதி முக்கியத்துவம் வாய்ந்த நமது வாழ்வாதாரம் சார்ந்த ஒன்பது அம்ச
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாம் போராட இருக்கிறோம்.
கோரிக்கைகள் நிறைவேற கோடிக்கைகள் போராட வாரீர் வாரீர் ஒற்றுமையோடு கரம்
கோர்த்து பார்வையற்ற பட்டதாரிகள் சங்கம் என்றால் என்னவென்று அரசுக்கும்
அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் பறைசாற்ற படையாய் கிளம்பி வாரீர் என்று
உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
தொடர்புக்கு. துணைத் தலைவர். L. ராமராஜன். 7010293340.
பணியில் இல்லாதவருக்கான செயற்குழு உறுப்பினர்
M. வெங்கடேசன் 7904881610
இவன் பொதுசெயலாளர்.
S. ரூபன்முத்து. B.A. B.ED.
Be the first to leave a comment