ஊனமுற்றோருக்கான தேசிய பணிவாய்ப்பு மேம்பாட்டு மையம்
(National centre for promotion of employment for disabled Persons NCPEDP)
ஒரு முக்கிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளின் வலுவான அரசியல் பங்கேற்பைப் பொதுத்தளத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னெடுப்பு அது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாடு தழுவிய அளவில், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மாற்றுத்திறனாளிகள் முன்வைக்க விரும்பும் விடயங்களைத் திரட்டி, விரிவான தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது மையம்.
இந்தத் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளாகிய நமது ஒவ்வொருவரின் கருத்தும் பங்களிப்பும் இடம்பெற வேண்டியது அவசியம் என்று நீங்கள் கருதினால், எதிர்வரும் பிப்பிரவரி ஏழாம் தேதிக்குள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள். படிவத்தை நிரப்புங்கள். உங்கள் மதிப்பு வாய்ந்த பங்களிப்பை உறுதி செய்யுங்கள்.
படிவத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெயர், தொடர்பு எண், உங்கள் மாநிலம் போன்ற விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இறுதியாக, கல்வி, பணிவாய்ப்பு, அணுகல், நிதிநிலை என பல்வேறு உரிமை சார்ந்த கோரிக்கைகள், அதற்கான தீர்வுகளையும் நீங்கள் வழங்கலாம்.
இப்படி நாடு முழுக்கத் திரட்டப்படும் கருத்துகள் அலசப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓர் ஒருங்கிணைந்த தேர்தல் அறிக்கையை மையம் வெளியிட உள்ளது.
படிவத்துக்கான இணைப்பு:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdn16sM24KWXgzssvH5X378SPytg2P34HM4rofptZaCV01QlQ/viewform
படிவம் தொடர்பான உங்கள் ஐயங்கள் மற்றும் கேள்விகளுக்கு:
பிறகென்ன?
இணைப்பைச் சொடுக்குங்கள்,
எண்ணங்களை முழங்குங்கள்!
Be the first to leave a comment