# CSGAB போராட்டக்களம்: நாள் ஏழு: மாநிலமெங்கும் பரவுகிறது எழுச்சி

- Link: https://thodugai.in/2024/02/18/csgab-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae/
- Published: 2024-02-18T22:32:27+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

அவர்களே பின்வாங்கிவிடுவார்கள் என்ற அசட்டை அதிகாரமொழிக்கு அதிரடியாய் ஒரு பதிலடியென
அடுத்தடுத்து மாவட்ட வாரியான போராட்டங்களைப் பல பார்வையற்ற அமைப்புகள் அறிவித்துவருகின்றன.

![போராட்ட அறிவிப்பு.
நாள் 19 02 2024.
இடம் கன்னியாகுமரி மாவட்டம்.
நேரம் காலை பத்து
மணி.
அனைவருக்கும் வணக்கம் நமது பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகள் சங்கத்தினர்
வேலைவாய்ப்பு உட்பட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி கடந்த ஏழு நாட்களாக
போராடிக் கொண்டு வருகின்றனர் . இப்போராட்டத்தை ஆதரிக்கும் வண்ணமாக 19 02 2024 திங்கள்
கிழமையான நாளை கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அமைந்துள்ள ஊனமுற்றோர்
மறுவாழ்வு மையத்தின் முன்பு குமரி மாவட்ட பார்வையற்றோர்களின் சார்பாக போராட்டம் ஒன்றை
நடத்த இருக்கின்றோம். ஆகையால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து பார்வையற்ற
நண்பர்களும், பார்வையற்ற கல்லூரி மாணவர்களும் மற்றும் பார்வையற்ற வேலையில்லாத பட்டதாரிகளும்
இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு 9894487748,
9486758073அன்பார்ந்த பார்வையற்றோர் சமூகமே! நமக்கான கோரிக்கைகளை முன்வைத்து நம் சகோதர
சகோதரிகள் ஒரு வாரத்திற்கு மேலாக போராடி வருகிறார்கள். அவர்கள் கரங்களை வலுப்படுத்த
ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு, கன்னியாகுமரியியை நோக்கி.
அலை கடலென திரண்டு
வாருங்கள். எல்லோரும் போராட்டத்தை செய்தியாக பார்த்துவிட்டு கடந்துவிடுகிறார்கள். நம்
சமூகத்தினரும் அவ்வாறே செய்யப் போகிறோமா? கோரிக்கைகள் வெல்வதற்கான சூழல் கைகூடி வரும்வேளையில்,
நாம் வாய்மூடி இருக்கப் போகிறோமா? நாம் அமைதியாகவே இருந்து எல்லாம் கைவிட்டுப் போனால்,
எதிர்கால பார்வையற்ற தலைமுறையினர் நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிப்பார்கள். நீங்கள்
பார்வை மாற்றுத்திறனாளியா? தயக்கத்தையும் குழப்பத்தையும் தூக்கி எறிந்துவிட்டு களத்துக்கு
வாருங்கள். களங்கண்டு போராட்டங்களை வெல்வோம். நம் வலிமை என்னவென ஆளும் வர்க்கத்திற்கு
சொல்வோம்.
](https://i0.wp.com/thodugai.in/wp-content/uploads/2024/10/8bdd6-05-kanniyakumari-
1.jpg?resize=580%2C751&ssl=1)

![மதுரை போராட்ட அறிவிப்பு.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர்
ஒரு வாரத்திற்கு மேலாக ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். தொடர்
உண்ணாவிரதம் இருக்கும் ஐவரில் ஒருவர் இக்கட்டான நிலையில் இருக்கிறார். இத்தகு சூழலில்
அவர்களது கரங்களையும் களத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் மதுரையில் 19/2/2024 திங்கள்
அன்று மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை: பார்வையற்றோர் மறுவாழ்வு சங்கம் (மதுரை), 
தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், விரல்மொழியர் மின்னிதழ் போன்றோர் ஒன்றிணைந்து
ஒருங்கிணைக்கிறார்கள்.
நாள்:019/2/2024. நேரம்: காலை. 9 மணி
இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் முன்பு
தொடர்புக்கு: 8825479416, 8072005506அவர்களது கரங்களையும் களத்தையும்
வலுப்படுத்தும் நோக்கில் மதுரையில் 19/2/2024 திங்கள் அன்று மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தை:
பார்வையற்றோர் மறுவாழ்வு சங்கம் (மதுரை), தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம்,
விரல்மொழியர் மின்னிதழ் போன்றோர் ஒன்றிணைந்து ஒருங்கிணைக்கிறார்கள்.
அன்பார்ந்த பார்வையற்றோர்
சமூகமே! நமக்கான கோரிக்கைகளை முன்வைத்து நம் சகோதர சகோதரிகள் ஒரு வாரத்திற்கு மேலாக
போராடி வருகிறார்கள். அவர்கள் கரங்களை வலுப்படுத்த ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு,
மதுரையை நோக்கி அலை கடலென திரண்டு வாருங்கள். எல்லோரும் போராட்டத்தை செய்தியாக பார்த்துவிட்டு
கடந்துவிடுகிறார்கள். நம் சமூகத்தினரும் அவ்வாறே செய்யப் போகிறோமா? கோரிக்கைகள் வெல்வதற்கான
சூழல் கைகூடி வரும்வேளையில், நாம் வாய்மூடி இருக்கப் போகிறோமா? நாம் அமைதியாகவே இருந்து
எல்லாம் கைவிட்டுப் போனால், எதிர்கால பார்வையற்ற தலைமுறையினர் நம்மை பார்த்து கைகொட்டி
சிரிப்பார்கள். நீங்கள் பார்வை மாற்றுத்திறனாளியா? மதுரைக்கு வரும் தூரத்தில் இருக்கிறீர்களா?
தயக்கத்தையும் குழப்பத்தையும் தூக்கி எறிந்துவிட்டு களத்துக்கு வாருங்கள். களங்கண்டு
போராட்டங்களை வெல்வோம். நம் வலிமை என்னவென ஆளும் வர்க்கத்திற்கு சொல்வோம்.
ஒருங்கிணைப்போர்:

பார்வையற்றோர் மறுவாழ்வு சங்கம் (மதுரை), 
தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம்

விரல்மொழியர் மின்னிதழ்
](https://i0.wp.com/thodugai.in/wp-content/uploads/2024/10/
a7b43-01-madurai-2.jpg?resize=580%2C751&ssl=1)

![[போராட்ட அறிவிப்பு 
நாள்: 19-02-2024 திங்கட்கிழமை.
 இடம்: அந்தியூர் முக்கு பவானி
பேருந்து நிலையம் அருகில்.
 நேரம்: காலை 10:00 மணி.
 அனைவருக்கும் வணக்கம்,
 கடந்த 
ஒரு வாரத்திற்கு மேலாக வாழ்வாதாரம், பணிவாய்ப்பு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்
மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.
 அத்தகைய போராட்டத்திற்கு
வலு சேர்க்கும் வகையில் ஈரோடு மாவட்ட பார்வையற்றோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தலைமையில்
மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது. எனவே, பார்வையற்ற சமூக உறவுகள் அனைவரும் திரளாக
கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி.


இப்படிக்கு,
 போராட்டக் குழு,
7904517437,
8940198957
](https://i0.wp.com/thodugai.
in/wp-content/uploads/2024/10/adc32-strike-announcements_pages-to-jpg-0002-2.jpg?
resize=580%2C751&ssl=1)

![ [## தஞ்சாவூர் போராட்ட அறிவிப்பு
**ஒரு கை தட்டினால் ஓசை வராது**
**ஒற்றுமையே வலிமை**
என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபிக்கும் நேரம் இது.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் மற்றும்
பட்டதாரிகள் சங்கம் சார்பாக கடந்த 12/02/2024ம் முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இதை நண்பர்கள் அனைவரும் அறிவீர்கள்.
இப் போராட்டத்தை
ஒடுக்குவதற்கு அரசாங்கம் காவல்துறையை வைத்து நம் அவர்கள் மீது அநாகரிகமான அடக்குமுறையை
கட்டவிழ்த்து வீதியில் இறக்கி விட்டுச்சென்றதையும் தாங்கள் அறிந்ததே.
ஒரு பார்வை அற்றவராய்
பார்வையற்ற சமூகத்திற்கு நடைபெற்ற இந்த அநீதிக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?
 ஆட்சி
மாறினாலும் காட்சி மாறுவதில்லை,  பார்வையற்றோர் என்ற ஏளனமா?  இதனால் உங்கள் வாக்கு 
வங்கி பாதிக்காது என்ற ஆணவமா?
இப்படி உங்கள் மனதில் எழும் கேள்விகளையும் குமுறல்களையும்
ஒருங்கிணைக்கிறது தஞ்சை மாவட்டத்தில் பார்வையற்றோர் மாணவர்கள் நடத்தும் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம்
**நாள்: 19/02/2024 **நேரம்: காலை 9.30 மணி முதல்.
 இடத்தை தெரிந்து கொள்ள
கீழ் கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
**இங்கனம், தமிழ்நாடு ஜனவரி
நான்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நிர்வாகிகள்.
தொடர்புக்கு: * 80983 68267
* 8122297691
*
7010838144
 உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
](https://i0.wp.com/thodugai.in/
wp-content/uploads/2024/10/7361f-strike-announcements_pages-to-jpg-0003-1.jpg?resize
=580%2C751&ssl=1)

![
நாள் 19 02 2024.
இடம் திருநெல்வேலி மாவட்டம்.
நேரம் காலை பத்து மணி.
அனைவருக்கும்
வணக்கம் நமது பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகள் சங்கத்தினர் வேலைவாய்ப்பு உட்பட
9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டி கடந்த ஏழு நாட்களாக போராடிக் கொண்டு
வருகின்றனர் . இப்போராட்டத்தை ஆதரிக்கும் வண்ணமாக 19 02 2024 திங்கள் கிழமையான நாளை
திருநெல்வேலி மாவட்டத்தில் வைத்து பாளை பார்வையற்றோர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
சங்கத்தின் மூலமாக போராட்டம் ஒன்றை நடத்த இருக்கின்றோம். ஆகையால் திருநெல்வேலி,தென்காசி,
தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பார்வையற்ற
நண்பர்களும், பார்வையற்ற கல்லூரி மாணவர்களும் மற்றும் பார்வையற்ற வேலையில்லாத பட்டதாரிகளும்
இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு 6383688605
](
https://i0.wp.com/thodugai.in/wp-content/uploads/2024/10/6533b-strike-announcements_pages-
to-jpg-0004-1.jpg?resize=580%2C751&ssl=1)

அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற தொடுகை மின்னிதழ் வாழ்த்துகிறது.

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2024/02/18/csgab-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2024/02/18/csgab-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2024/02/18/csgab-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2024/02/18/csgab-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae/?subject=%5BShared%20Post%5D%20CSGAB%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%3A%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%3A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&body=https%3A%2F%2Fthodugai.in%2F2024%2F02%2F18%2Fcsgab-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%258f%25e0%25ae%25b4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2024/02/18/csgab-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2024/02/18/csgab-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b4%e0%af%81-%e0%ae%ae/?share=telegram)

Like Loading…

### _Related_
