# ஓர் அறிவார்ந்த அழைப்பு: வே. சுகுமாறன்

- Link: https://thodugai.in/2023/12/31/letter-about-arive-thunai-research-centre/
- Published: 2023-12-31T05:10:52+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

![இன்றைய தேவை
வே சுகுமாரன், எண்.6,
தண்ணீர் தோட்டம் வீதி, விரிவு 1,
ஒண்டிபுதூர்,

கோயமுத்தூர் - 641016.
கைபேசி 9443112831
அன்புடையீர்,
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள்
நுண் சிறுபான்மை குழுவினர் தான். பிற நாடுகளைப் போல மாற்றுத்திறனாளிகள் பற்றிய கருத்தாக்கம்
எதுவும் இங்கு உருவாக்கப்படவில்லை. அதன் விளைவாக இவர்களை பற்றிய ஆய்வுகளும் இந்தியாவில்
பெரிய அளவில் இல்லை. இவை அனைத்தையும் நாம் இன்று கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம். இந்நிலையில் மேற்குறித்த விடயம் பற்றிய என் கருத்துக்களை உங்கள் முன்வைக்கிறேன்.
ஊர் கூடி தேர் இழுப்பது போன்றது தான் இது.
பிற அமைப்புகள்
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று
பல அமைப்புகள் உண்டு. இரண்டு வகையான சிந்தனை ஓட்டத்தை(SCHOOL OF THOUGHTS) கொண்டவை 
அவை. ஒன்று மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளி அல்லாதவர் இயக்குவது. மற்றொன்று
மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்றுத்திறனாளிகளே இயக்குவது. இவ்விரண்டு வகையினரும் பெரும்பாலும்

மாற்றுத்திறனாளிகளின் பௌதீக தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உடை
உணவு இருப்பிடம் போன்ற புறவயமான தேவைகளை இவர்கள் பூர்த்தி செய்ய முனைகிறார்கள்.
ஆனால்
இவர்களுடைய ஆளுமை வளர்ச்சி அறிவு வளர்ச்சி, அகவயமான பிற பிரச்சனைகளை இவர்கள் கருத்தில்
கொள்வதில்லை. மேற்சொன்ன இந்த விடயங்களை பற்றி கவலைப்பட ஏதேனும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.
தேவையும் அதற்கான நியாயமும் (NEED AND JUSTIFICATION)
நாம் இங்கு முக்கியமாக கவனத்தில்
கொள்ள வேண்டியது தமிழ்நாட்டில் உள்ள 8 லட்சம் பார்வைமாற்று திறனாளிகளை பற்றியது. பார்வை
மாற்றுத்திறனாளிகளின் அறிவு வளர்ச்சி பற்றி அவர்களுடைய ஆளுமை
](https://i0.wp.com/thodugai.
in/wp-content/uploads/2024/10/19b46-e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf-e0aea4e0af87e0aeb5e0af88_pages-
to-jpg-0001.jpg?resize=580%2C751&ssl=1)

![வளர்ச்சி பற்றி அகவயமான இதர தேவைகளை பற்றி சிதைந்து போய்க் கொண்டிருக்கிற அவர்களுடைய
கல்வியைப் பற்றி நவீன அறிவியல் மாற்றம் சார்ந்த விடயம் பற்றியும் நாம் சிந்தித்து செயல்பட
வேண்டியுள்ளது. இந்த அடிப்படையிலேயே ஒரு ஆய்வு மையத்தை நிறுவலாம் என்று எண்ணுகிறேன்.

அறிவே துணை ஆய்வு மையம்
மேற்சொன்ன இந்த குழுவினருக்காகவும் சொல்லப்பட்ட காரணங்களுக்காகவும்
தன்னலமற்ற அர்ப்பண உணர்வோடு பணியாற்ற விரும்பும் நண்பர்களை இருகரம் கூப்பி வரவேற்பது
இக்கடிதத்தின் நோக்கம்.
ஆய்வு மையம் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்குமே தவிர யாருக்கும்
எதுவும் கொடுக்கும் நிலையில் இருக்காது. ஏனெனில் இந்த திட்டங்களுக்கு மிகப்பெரிய அளவில்
செல்வம் தேவைப்படும்.
திட்டங்கள் சுருக்கமான அளவில்
1) பார்வையற்றவர்களைப் பற்றிய ஆய்வுகள்
பல வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2)எல்லா மொழியிலும் அனேகமாக பார்வையற்றவர்களுக்கு
நூல் நிலையங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான்
பார்வையற்றோருக்கான பிரத்யேக
நூல் நிலையம் இல்லை. அரசின் முயற்சியால் இப்போதெல்லாம் மைய நூலகங்களில் பார்வையற்றோருக்கான
நூல்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இம்முயற்சியை நன்றியோடு ஏற்றுக்கொள்ளும்
அதேசமயம் இம்முயற்சி அனைவராலும் பயன்படுத்த முடியாது.
அப்படியானால் அனைவரும் பயன்படுத்த
என்ன செய்ய வேண்டும்.
நூல் நிலையத்திலிருந்து அஞ்சல் வழியாக பார்வையற்றவரின் வீட்டுக்கு
நூல்கள் செல்ல வேண்டும். பார்வையற்றவர்கள் அதை படித்த பிறகு அஞ்சல் வழியாக நூலகத்திற்கு
அனுப்பி வைக்க வேண்டும். இதுவே எல்லோருக்கும் பயன்படுவதற்கான சிறந்த வழியாக இருக்கும்.

நூல் நிலையத்திற்கான பெரிய அளவிலான கட்டிட வசதி நூல் தயாரிப்பு அச்சுக்கூடம் போன்றவை
செலவினத்தை கொண்ட அடிப்படை தேவைகளாகும்.
3)பார்வையற்றோருக்கான புள்ளி எழுத்தை உருவாக்கிய
லூயிபிரெயில் பிறந்து 213 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் இன்னமும் பிரெயில் எழுத்து
தெரியாத பார்வையற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரெயில் எழுத்து அறிவை
பரவலாக்குவது ஒரு கட்டாயத் தேவையாகிறது.
](https://i0.wp.com/thodugai.in/wp-content/
uploads/2024/10/47662-e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf-e0aea4e0af87e0aeb5e0af88_pages-
to-jpg-0002.jpg?resize=580%2C751&ssl=1)

![> பார்வையற்றவர்களின் அறிவை வளர்க்கவும் அவர்களுடைய எழுத்து திறனை வளர்க்கவும் ஒரு
பிரெயில் இதழ் தொடங்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
பார்வையற்ற படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து
அவர்களுக்கு ஒரு விருது வழங்கலாம்.
4) உறுப்பினர்கள் ஆண்டுதோறும் ரூபாய் 3000/- சந்தவாக
செலுத்தலாம். உறுப்பினர்கள் நிதி திரட்டுவதிலும் இவ்வமைப்பை செம்மையாக கொண்டு செலுத்துவதிலும்
தீவிர நாட்டம் காட்டும் அவசியமிருக்கிறது. இவ்வமைப்பு இந்தியாவிலேயே முதல் மாதிரியாக
உருவாக்கப்படுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
இவ்வமைப்பிற்காக சமூக ஊடகங்களையும் செய்தித்தாள்களையும்
பயன்படுத்திக் கொள்வோம்.
உங்கள் மேலான ஆலோசனையை உடனே தெரிவிக்கவும்.
பொதுநல சேவை செய்ய
விரும்பும், 18 வயது நிரம்பிய தொண்டுள்ளம் படைத்த எவரும் இவ்வாய்வு மையத்தில் இணைந்து
செயல்படலாம்.
ஒண்டிப்புதூர்
01-03-2023
நன்றி
இவண்
அன்பன் வே.சுகுமாரன்
](https://i0.
wp.com/thodugai.in/wp-content/uploads/2024/10/6dd72-e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf-
e0aea4e0af87e0aeb5e0af88_pages-to-jpg-0003.jpg?resize=580%2C751&ssl=1)

பின்குறிப்பு: பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வு மையம் 6-12-2023 அன்று பதிவு செய்யப்பட்டு
விட்டது

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2023/12/31/letter-about-arive-thunai-research-centre/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2023/12/31/letter-about-arive-thunai-research-centre/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2023/12/31/letter-about-arive-thunai-research-centre/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2023/12/31/letter-about-arive-thunai-research-centre/?subject=%5BShared%20Post%5D%20%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%20%E0%AE%B5%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D&body=https%3A%2F%2Fthodugai.in%2F2023%2F12%2F31%2Fletter-about-arive-thunai-research-centre%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2023/12/31/letter-about-arive-thunai-research-centre/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2023/12/31/letter-about-arive-thunai-research-centre/?share=telegram)

Like Loading…

### _Related_
