அறிவிப்பு: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்-2023: அரசின் முக்கிய அறிவிப்புகள்

அறிவிப்பு: அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்-2023: அரசின் முக்கிய அறிவிப்புகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
சிவ் தாஸ் மீனா தலைமைச் செயலாளர்
வாய்மையே வெல்லும்
மாற்றுத்திறனாளிகள் நலத் துறை
தலைமைச் செயலகம், சென்னை-600 009.
நேர்முகக் கடித எண்.pfile No.141/மா.தி.ந.2/2023-3, நாள் 21.11.2023 அன்பார்ந்த மாவட்ட ஆட்சியர்களே,
பொருள்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - டிசம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக,
பார்வை: மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் ந.க.எண்.3609/நிர்2.2/2023, நாள் 10.11.2023,
பார்வையில் காணும்
கடிதத்தின் மீது தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது.
2. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை போன்று மாற்றுத்திறனாளிகள் தினத்தை (டிசம்பர்-3) முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக 2023 ஆண்டிலும் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஊதா (Purple) நிறத்தில் ஒளியூட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்மதிப்புடன்
தங்கள் அன்புள்ள,
பெறுநர்
3/4
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்.
தொலைபேசி: 044-25671555 நிகரி: 044-25672304
மின்அஞ்சல்: cs@tn.gov.in
அழைப்பிதழ்
அன்புடையீர்,
2023 ஆம் ஆண்டிற்கான உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, 02 டிசம்பர் 2023 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்படுவதையொட்டி காலை 10.30 மணிக்கு, சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் (மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர்} திரு. மு. க. ஸ்டாலின்,
அவர்கள் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில்,
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கான மாநில விருதுகள் வழங்கப்படவுள்ளது. ஊதா அங்காடி மாற்றுத்திறனாளிகளால் படைக்கப்பட்ட ஓவியங்கள், மாற்றுத்திறனாளிகளால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சி துவக்கி வைக்கப்படவுள்ளது. இச்சிறப்பு நிகழ்வில் பங்குகொள்ள தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
இப்படிக்கு
ஏ.கே.கமல்கிஷோர்
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர்
குறிப்பு: விழாவில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதி தாங்கள் காலை
09.00 மணிக்குள் அரங்கில் அமரும்படி வேண்டிக்கொள்கிறோம்.

எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற, வாட்ஸ் ஆப் வாயிலாக எங்களோடு இணையுங்கள்.
follow our whats app channel

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *