நேற்று, (அக்டோபர் 12, வியாழக்கிழமை) சிலஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிடமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த திருமதி. ஜெயஸ்ரீ முரலிதரன் இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 24, 1967ல் பிறந்த இவர், 2002 ஆம் ஆண்டு தமிழக பேட்ஜ் ஐஏஎஸ் ஆவார்.
2011, ஜூன் 2 முதல், 2014, டிசம்பர் 27 வரை திருச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார்.
2016ல் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்ட இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
அருமையான பதிவு