பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட சில துறைகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள ஆசிரியர்ப் பயிற்றுநர் (BRTE) பணியிடங்களுக்கான நியமனத்தேர்வு எதிர்வரும் ஜனவரி 7, 2024 அன்று நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை
(Notification No. 03/2023 Date. 25.10.2023
GOVERNMENT OF TAMILNADU
TEACHERS RECRUITMENT BOARD)
ஆசிரியர்த் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள மற்றும் எதிர்பார்க்கப்படும் காலிப்பணியிடங்களாக முறையே, 2171, 23, 16 மற்றும் 12 மொத்தம் 2222 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டாரவள ஆசிரியர்ப் பயிற்றுநர்களைப் பணியமர்த்துவதற்கான நியமனத்தேர்வு எதிர்வரும் ஜனவரி 7, 2024 அன்று நடைபெறும் என ஆசிரியர்த் தேர்வு வாரியம் கடந்த 25.அக்டோபர்.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டெட் ஆசிரியர்த் தகுதித்தேர்வு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுடைய தேர்ச்சிச் சான்றிதழுடன் எதிர்வரும் நவம்பர் 1, 2023 முதல் 30 நவம்பர், 2023 மாலை ஐந்துமணி வரை டிஆர்பி இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான முறையீடுகளை trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:
*G.O (M.s) No.185, School Education (Budget-1) Department dated: 21.10.2023
என்ற அரசாணைக்கிணங்க, கடந்த ஜூலை 1, 2023 அன்றைய தேதியில், பொதுப்பிரிவினருக்கு 58 வயதும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 53 வயதும் உச்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
*பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ. 300, பிற பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் ரூ. 600.
*நியமனத் தேர்வைப் பொருத்தவரை, பகுதி 1ல் 50 மதிப்பெண்களுக்கு 30 கொள்குறி வினாக்கள் கொண்ட கட்டாயத் தமிழ்த் தகுதித் தேர்வு 30 நிமிடங்களுக்கு நடத்தப்படும். வினாக்கள் பத்தாம் வகுப்புத் தரத்தில் இருக்கும்.
பகுதி 2ல், பாடவாரியான தேர்வு பட்டப்படிப்பு தர அடிப்படையில் அமைந்த 150 கொள்குறி வினாக்களைக்கொண்டு, 150 மதிப்பெண்களுக்கு மூன்றுமணி நேரம் நடத்தப்படும்.
*கட்டாயத் தமிழ்த் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தரவரிசை கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படாது. அதேசமயம், கட்டாயத் தமிழ்த் தகுதித் தேர்வில் 40 விழுக்காடு மதிப்பெண்கள் அதாவது 20 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அவர்களின் பகுதி 2 விடைத்தாள்கள் மதிப்பீட்டுக்கு் எடுத்துக்கொள்ளப்படும்.
*G.O.(Ms.) No. 49, Human Resources (M) Department, dated 23.05.2022
என்ற அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டாயத் தமிழ்த்தகுதித் தேர்விலிருந்து விலக்கு வழங்குவதில் பின்பற்றப்படும்.
*மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள்
G.O.(Ms.) No.20, Welfare of Differently Abled Persons (DAP.3.2) Department dated 20.06.2018.
என்ற அரசாணையின் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
*இந்த அறிவிப்பின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் 75 பணியிடங்களும், அவர்களுள் பார்வையற்றோருக்கென 21 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பார்வையற்றோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 21 பணியிடங்களில் 11 பணியிடங்கள் மொழி மற்றும் வரலாறு சார்ந்தவை. எஞ்சிய 10 பணியிடங்கள் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்தவை.
total | 371 | 214 | 200 | 274 | 273 | 117 | 118 | 346 | 87 | 2000 |
Communal turn | Tamil | English | Max | Physics | Chemistry | Botany | Zoology | History | Geography | total |
GT | 61 | 36 | 33 | 45 | 45 | 19 | 19 | 57 | 13 | 328 |
GT CAT-1(VI) | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 9 |
GTCAT-2(HI) | 0 | 0 | 1 | 1 | 0 | 1 | 0 | 0 | 1 | 4 |
GT CAT-3(LD) | 1 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 4 |
GTCAT-4(MI) | 1 | 1 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 3 |
GTW CAT-2(HI) | 1 | 0 | 0 | 0 | 1 | 0 | 1 | 1 | 0 | 4 |
BC | 50 | 30 | 27 | 38 | 38 | 16 | 17 | 48 | 12 | 276 |
BCCAT-1(VI) | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 6 |
BCCAT-2(HI) | 1 | 0 | 0 | 1 | 0 | 0 | 0 | 1 | 0 | 3 |
BCCAT-3(LD) | 1 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 |
BCCAT-4(MI) | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 8 |
BC W CAT-4(MI) | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 6 |
MBC/DNC | 38 | 22 | 21 | 27 | 27 | 13 | 13 | 36 | 10 | 207 |
MBC/DNC CAT-1(VI) | 1 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 4 |
MBC/DNC CAT-2(HI) | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 6 |
MBC/DNC CAT-3(LD) | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 9 |
MBC/DNC W CAT-4(MI) | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
SC | 28 | 17 | 16 | 23 | 23 | 10 | 10 | 26 | 8 | 161 |
SC CAT-1(VI) | 1 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 2 |
SCCAT-3(LD) | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 6 |
SCA | 5 | 3 | 3 | 4 | 4 | 1 | 1 | 4 | 1 | 26 |
SCAQ CAT-1(VI) | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
whole total | 14 | 8 | 8 | 11 | 10 | 4 | 4 | 13 | 3 | 75 |
பார்வையற்றோருக்கான பிரத்யேக இடங்கள் குறித்த அட்டவணை
Communal turn | Tamil | English | Max | Physics | Chemistry | Botany | Zoology | History | Geography | totl |
GT CAT-1(VI) | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 1 | 9 |
BCCAT-1(VI) | 1 | 1 | 1 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 6 |
MBC/DNC CAT-1(VI) | 1 | 0 | 0 | 1 | 1 | 0 | 0 | 1 | 0 | 4 |
SC CAT-1(VI) | 1 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 0 | 2 |
total | 4 | 2 | 2 | 3 | 3 | 1 | 1 | 4 | 1 | 21 |
பொதுவாகப் பார்வையற்றவர்கள் தங்கள் மேல்நிலை வகுப்புகளில் மொழி மற்றும் வரலாறு பாடப்பிரிவுகளையே தெரிவு செய்து படிக்கின்றனர். ஓரிரு ஆண்டுகளாகத்தான் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் கணிதம் மற்றும் அறிவியல்ப் பாடப்பிரிவுகள் சார்ந்து பார்வையற்றோரின் கவனம் திரும்பத் தொடங்கியிருக்கிறது. எனினும், நடுவயதில் பார்வையை இழந்தவர்களில் பெரும்பாலோர், தங்கள் மேல்நிலைக் கல்வியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளைத் தெரிவுசெய்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த எஞ்சிய 10 பணியிடங்கள் பயன்படும் எனச்சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Be the first to leave a comment