“பேரக் கேட்டாலே சும்மா அளறுதில்ல”
“யாரு?”
“வேற யாரு நம்ம குழந்தைங்கதான்.”
“எந்தப் பேரைக் கேட்டா?”
“திருக்குறள்.”
ஆமா. குஷியா இருக்கிற குழந்தைங்கலாம் குறளுன்னு சொன்னாலே மிரள ஆரம்பிச்சிடுறாங்க.
மனப்பாடம் பண்ணு. மார்கை அள்ளுனு வருஷக்கணக்கா வள்ளுவத்த வச்சு செஞ்சுட்டோம் நாம.
“வள்ளுவத்த மட்டுமா வச்சு செஞ்சோம்? வருங்காலத் தூண்களையும்தான்.”
“அட குழந்தைங்கள விடுங்க. மனம் திறந்து சொன்னா, திருக்குறளுன்னா நாமே திக்குமுக்காடிடுறோம்ல.”
அதனால, ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தோட மூன்றாம் ஆண்டுவிழாவ முன்னிட்டு, ‘குறள் குடையும் போட்டி’ ஏற்பாடாயிருக்கு.
ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் திருக்குறள் வினாடிவினா
நாள்: செப்டம்பர் 28. 2023, வியாழக்கிழமை,
நேரம்: காலை 10.30 மணி.
மீட்டிங் இணைப்பு:
https://us06web.zoom.us/j/83570327236?pwd=2Jw26Zn4eb38bgpZGoKu4EwSDm4knv.1
மீட்டிங் குறியீடு: 835 7032 7236
கடவுக்குறி: 1330
ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் ஆறு பயிற்சியாளர்கள் பங்கேற்க,
விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியரும், முதுகலைத் தமிழாசிரியருமான திரு. ரா. பாலகணேசன் (அருப்புக்கோட்டை) அவர்கள் சிறப்பழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்.
நிகழ்வை நெறிப்படுத்துகிறார்கள் திரு. ம. பாலகிருஷ்ணன் மற்றும் ப. சரவணமணிகண்டன்.
நிகழ்ச்சியை யூட்டூபிலும் நேரலையாகக் காண:
https://www.youtube.com/@thodugai
சலசலப்பில்லாம, கலகலப்பா ஒரு மேடை!
வாங்க பாஸ் வாங்க!
Be the first to leave a comment