ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் மூன்றாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, இன்று ஜூம் அரங்கில் வினாடி வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்சலிவன் மையத்தில் இணைந்து பயிலும் சுமார் 24 போட்டியாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
மையத்தின் நிர்வாகிகளான செல்வி நந்தினி மற்றும் செல்வன் சந்தோஷ்குமார் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. கணேஷ் அவர்கள் (வருவாய்த்துறை), திரு. விஜய் அவர்கள் (வணிகவரித்துறை) மற்றும் திரு. சுந்தர் மகாலிங்கம் அவர்கள் (வருவாய்த்துறை) பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.
அறிவுச் செறிவு நிறைந்த இவர்கள் மூவருமே, தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, ஆன்சலிவன் பயிற்சி மைய மாணவர்களுக்குத் தன்னார்வப் பயிற்றுநர்களாகப் பங்காற்றிவருபவர்கள்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பழைப்பாளர்கள் மற்றும் இதன் வெற்றிக்காய் பின்னணியில் உழைக்கும் மையத்தின் இதர நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், கார்த்திகேயன், பவுனு, பரமசிவம் என அனைவருமே இளைஞர்கள்.
இளையோர் முயற்சிக்குக் கைதட்டல் வழங்கிட, தோள் தட்டி அவர்களுக்கு ஒரு சபாஷ்சொல்லிட, இணைந்திடுங்கள் தொடுகையின் யூட்டூப் நேரலையில்.
நேரம் இன்று காலை 10 மணி.
நேரலை இணைப்பு:
https://www.youtube.com/@thodugai
Be the first to leave a comment