மாணவர்களுக்கு வாழ்த்துகள்! பெற்றோருக்கு ஒரு செய்தி!

மாணவர்களுக்கு வாழ்த்துகள்! பெற்றோருக்கு ஒரு செய்தி!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
பதிலி எழுத்தர் துணையுடன் தேர்வெழுதும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள்
பதிலி எழுத்தர் துணையுடன் தேர்வெழுதும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் முறையே, 12,11 மேல்நிலை வகுப்புகளுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. தேர்வை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான மாணவர்களுள் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்களும் அடக்கம்.

தேர்வில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பதிலி எழுத்தர் உள்ளிட்ட சிறப்புத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசின் தேர்வுத்துறை இயக்ககம் கடந்த ஆண்டு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், அவர்களின் சிறப்புத் தேவைகளை உள்ளடக்கிய விரிவான அரசாணை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு மொழித்தேர்வினை எழுதுவதிலிருந்து விலக்கு வழங்கிடும் அம்சம் இனிவரும் ஆண்டுகளில் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டிய ஒன்று.

மற்றபடி, பதிலி எழுத்தர் ஒதுக்கீடு, தரைத்தளங்களில் தேர்வெழுத வழிசெய்தல், கூடுதல் ஒருமணி நேரம், டைலர் ஃபிரேம், டாக்கிங் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி, தேர்வுக் கட்டணச் சலுகை என அனைத்துத் தரப்பு மாற்றுத்திறனாளிகளின் சிறப்புத் தேவைகளும் கவனத்தில்கொள்ளப்பட்டுள்ளன.

சுமார் 12 பக்கங்களைக்கொண்ட அரசாணையின் அனைத்து அம்சங்களையும் தேர்வு மைய அலுவலர்கள், தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் அறிந்திருப்பது கட்டாயம் என்றாலும், எதிர்பாராத வண்ணம் நடந்தேறும் சில தற்செயலான இடைஞ்சல்களை உடனடியாகத் தவிர்க்கும் பொருட்டு,  10, 11, 12 அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாற்றுத்திறன் மாணவர்களின் ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பெற்றோர் அனைவரும் இந்த அரசாணையைக் கையில் வைத்திருப்பது அவசியமான ஒன்று. எனவே, அரசாணைக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசாணைக்கான இணைப்பு:

அச்சம் தவிர்த்து, பதட்டம் இன்றித் தேர்வெழுதி வெற்றிபெற அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகிறது தொடுகை.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *