# தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24, மாற்றுத்திறனாளிகள் நலன்

- Link: https://thodugai.in/2023/03/20/tamilnadu-budget-2023-24/
- Published: 2023-03-20T18:11:00+05:30
- Author: தொடுகை மின்னிதழ்

![பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர்](https://i0.wp.com/thodugai.in/wp-content/
uploads/2024/10/d5505-pr200323_cm2.jpg?resize=580%2C222&ssl=1)

[நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்துப் படிக்க இங்கே க்லிக் செய்யவும்.](https://www.hindutamil.in/news/tamilnadu/963098-tamil-nadu-budget-2023-live-updates-16.html)

தமிழக அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை நேற்று நிதியமைச்சர் திரு.
P.T.R. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில்
மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெற்றன.

![மாற்றுத் திறனாளிகள் நலன் 
48. மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரையே முத்தமிழறிஞர் கலைஞர்தான்
சூட்டினார்என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இந்தத் துறை மிக முக்கியமானது
என்பதால் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்துப்
பணிகளை உன்னிப்பாக கண்காணித்துவருகிறார்.
உலக வங்கி நிதி உதவியுடன், 1,763 கோடி ரூபாய்
மதிப்பில் , மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் ( RIGHTS Project ) செயல்படுத்தப்பட்டு
வருகின்றது.
மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து,
தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி , அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் 
ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் , 2023-24 ஆம் 
ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
உடல் குறைபாடு மதிப்பீட்டுச்சான்றளித்தல்,
ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள்
அமைக்கப்படும். மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களில்
சலுகைகளைப் 
](https://i0.wp.com/thodugai.in/wp-content/uploads/2024/10/7acee-fin-
23-1.jpeg?resize=580%2C760&ssl=1)

![பெற உதவுவதற்காகவும் தன்னார்வலர்களைக் கொண்ட 150 அண்மை மையங்கள் உருவாக்கப்படும்.

49. மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட 6.84 லட்சம் [ மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் 
வகையில் அவர்களின் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் , கடுமையாக
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையை 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாகவும்
உயர்த்திட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஏற்கெனவே ஆணையிட்டுள்ளார்கள். இதற்கென , 
வரவு - செலவுத் திட்டத்தில் 1,444 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
50. மாற்றுத்திறனாளிகளின்
தொழில் முன்னேற்றத்திற்காக கடன் உத்தரவாதம் , வட்டி மானியம் ஆகியவற்றை மாநில அரசு வழங்கி
வருகிறது. இதன் பயனாக , 11,155 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி
மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக 50 கோடி ரூபாய் கடனுதவியை இந்த ஆண்டில் வழங்கி , நாட்டிலேயே
முதல்இடத்தில் தமிழ்நாடு விளங்குகிறது. 
51. அரசுத் திட்டங்களின் பலன்கள் முழுமையாக
மாற்றுத்திறனாளிகளைச் சென்றடைய , மாற்றுத்திறனாளிகள் பற்றிய ஒரு விரிவான தரவுத்தளத்தை
அரசு உருவாக்கி வருகிறது. 
](https://i0.wp.com/thodugai.in/wp-content/uploads/2024/
10/28221-fin-23-2.jpeg?resize=580%2C847&ssl=1)

![இதன் முதற்கட்டமாக , பல்வேறு அரசு நலத்திட்டங்களில் பயன்பெறும் 9,08,000 பேர்களின்
விவரங்கள் கொண்ட தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது .](https://i0.wp.com/thodugai.
in/wp-content/uploads/2024/10/b379a-fin-23-3.jpeg?resize=580%2C255&ssl=1)

### பகிர

 * [  Facebook ](https://thodugai.in/2023/03/20/tamilnadu-budget-2023-24/?share=facebook)
 * [  X ](https://thodugai.in/2023/03/20/tamilnadu-budget-2023-24/?share=twitter)
 * [  Print ](https://thodugai.in/2023/03/20/tamilnadu-budget-2023-24/#print?share=print)
 * [  Email ](https://thodugai.in/2023/03/20/tamilnadu-budget-2023-24/?subject=%5BShared%20Post%5D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%202023-24%2C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D&body=https%3A%2F%2Fthodugai.in%2F2023%2F03%2F20%2Ftamilnadu-budget-2023-24%2F&share=email)
 * [  WhatsApp ](https://thodugai.in/2023/03/20/tamilnadu-budget-2023-24/?share=jetpack-whatsapp)
 * [  Telegram ](https://thodugai.in/2023/03/20/tamilnadu-budget-2023-24/?share=telegram)

Like Loading…

### _Related_
