பிப்பரவரி… என்னே பெயர் பொருத்தம் இந்த மாதத்திற்கு. இந்த மாதம் தொடங்கிவிட்டாலே, அரசு ஊழியர்கள் பிப்பிரபிரபிரபிரபிர பப்பரபரபரபரவென வருமானவரித் தாக்கல் செய்உம் படிவத்தைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதும், எதிர்பட்ட எவரும் தன்னை அரசு ஊழியர் என்று சொல்லிவிட்டாலோ, அல்லது போன் செய்கிற நபர் அரசு ஊழியர் என்றாலோ, “இதில் இதைக் கழிக்கலாமா? அதற்கு exemption உண்டா?” என அங்கிங்கெனாதபடி, எங்கும் ‘tax’ தான் ஒரே பேச்சு. அது வந்துவிடாமல் பார்த்துக்கொண்டால்தான் நிம்மதிப் பெருமூச்சு.
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை, சில வருமானவரிச் சலுகைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 100 விழுக்காடு பார்வையற்றவர் எனில், அவர் 80U பிரிவில் தன்னுடைய வருமானத்திலிருந்து ரூ. 125000ஐக் கழித்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார். அதேபோல்,ஊதியத்தோடு தான் பெறும் ஊர்திப்படியையும் (conveyance allowance) அவர் அப்படியே கழித்துக்கொள்ளலாம்.
மேற்கண்ட விலக்குகளைப் பெற அவர், தான் ஒரு பார்வையற்றவர் என்பதை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றினை வருமான வரிப் படிவத்தோடு இணைத்திட வேண்டும். இதற்காக அவர் இங்கும் அங்கும் அலைந்து, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவச் சான்று பெறும் நடைமுறை இப்போது இல்லை. அவர் தன்னுடைய தேசிய அடையாள அட்டையின் நகலைப் படிவத்தோடு இணைத்தாலே போதுமானது.
மேற்சொன்ன விடயங்கள் குறித்தெல்லாம் பல உயர் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. அதனால் பல சமயங்களில் நம்மவர்களுக்கும் உயர் பீடத்துக்கும் முட்டல், மோதலெல்லாம் வந்துவிடுகிறது. எனவே, கீழே அதற்கான உரிய ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கிக் கையில் வைத்துக்கொண்டு பேசுங்கள்.
தாலின் சத்தம் தவிர்ப்போம்…
தாள்களால் யுத்தம் தொடுப்போம்! ஏனெனில், நம்மவர்க்கு
அவயங்களில் தால்தான் வாள், பல சமயங்களில் தாளே வாள்!
தொடர்புடைய ஆணைகளை பதிவிறக்கதொடர்புடைய ஆணைகளை பதிவிறக்க
Be the first to leave a comment