முதல்வர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
- மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வகையிலான கருவிகள் 36 மாதிரிகளில் 7,219 கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
- நகர பேருந்துகளில் (White Board Bus) மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமில்லாமல் பயணம்.
- UDD Card வழங்குவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 9 லட்சத்து 30 ஆயிரத்து 909 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 67 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
- 1096 பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென 2021-2022ஆம் நிதியாண்டில் 813 கோடியே 63 இலட்ச ரூபாயும் 2022-23 நிதியாண்டில் 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் உலக வங்கி உதவியுடன் 6 ஆண்டு காலத்திற்கு 1702 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்தின் மூலமாக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினையும் பரிசுத் தொகையாக, பாதித்தொகை ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையும் ரொக்கமாக வழங்கப்படும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Be the first to leave a comment