அரசுப் பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வுகளில் 4% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க துணைக்குழு ஒன்றினை அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, “அரசுப்பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஒன்றிய அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்கலாமே!
வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: வெல்லட்டும் சமூகநீதி!
மேலும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசுப்பணி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட அலுவலர்களைக் கொண்டு துணைக்குழுவினை அமைக்கலாம் எனவும், இக்குழு மேலும், பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில வரைவுகொள்கையினை இக்குழு அமைக்கப்பட்ட நாள்முதல் ஒரு மாத காலத்திற்குள் உயர்மட்டக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் அதற்குரிய ஆணையினை வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அரசினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலித்த அரசு, அதனை ஏற்று, அரசுப்பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து கீழ்க்காணுமாறு உறுப்பினர்களைக் கொண்ட துணைக்குழு அமைத்து ஆணையிடுகிறது:
1. அரசு துணைச் செயலாளர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
2அரசு துணைச் செயலாளர். மனிதவள மேலாண்மைத்துறை
3. அரசு துணைச் செயலாளர்.
சட்டத் துறை
4. துணைச் செயலாளர். (சிறப்பு அழைப்பாளராக ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
சென்னை -3.
5.) துணை இயக்குநர் (பயிற்சி). (கூட்டுனர்)
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம். சென்னை -5.
6. உதவி இயக்குநர் (பணியமர்த்தல்), மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்,
சென்னை -5.)
7. சட்ட ஆலோசகர்.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், சென்னை -5.
மேலும், அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து துணைக்குழுவினரால் நிறைவேற்றப்படும் அறிக்கையில் கொணரப்படும் கருத்துக்களின் மீது கூர்ந்தாய்வு செய்ய ஏதுவாக உயர்மட்டக் குழு அமைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படும்.” என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையைப் படிக்க மற்றும் பதிவிறக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.
Be the first to leave a comment