"ஒப்புதல் வழங்கிடுவீர்! ஒன்றாக இணைந்திடுவீர்!" - பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு

“ஒப்புதல் வழங்கிடுவீர்! ஒன்றாக இணைந்திடுவீர்!” – பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
இடது: பார்வையற்ற ஒருவர் பிரெயில் படித்துக்கொண்டிருக்கிறார். வலப்பக்கம் உள்ள கணினித்திரையில் PEROB Movement என எழுதப்பட்டுள்ளது.
MPERB logo

வணக்கம்!

தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. முருகேசன் அவர்கள் தலைமையில் அமைத்துள்ள புதிய மாநிலக் கல்விக்கொள்கை வரைவுக்குழுவிற்குப் பல்வேறு தரப்பினரும் தமது கருத்துகளை அனுப்பி வருகின்றனர். எதிர்வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கருத்துகளை சமர்ப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்வையற்றோர் தொடர்பாக தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்த பரிந்துரைகளைப் பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம் விரிவான விவாதங்கள் மற்றும் கருத்துக்கேட்புகளுக்குப் பின்னர் உருவாக்க்யுள்ளது.

இப்பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கி ஆதரிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியலையும் இணைத்து வரைவுக்குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளது பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம். இதன்மூலம் பார்வையற்ற சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் கருத்தாக இப்பரிந்துரைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வரைவுக்குழுவினால் பரிசீலிக்கப்படும்.

எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைப் படித்து அதன் மீது தங்களது ஆதரவையும் ஒப்புதலையும் பார்வையற்றோர் நலன்சார்ந்து இயங்கும் அமைப்புகளும் தனிநபர்களும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களது ஒப்புதலையும் ஆதரவையும் பெயர், முகவரி ஆகியவற்றுடன் mperb.tn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் அக்டோபர்  7 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒப்புதல் படிவத்தையும் நிரப்பிடலாம்.

மின்னஞ்சல் அனுப்ப இயலாதவர்கள் மட்டும் எழுத்து அல்லது குறள்ப்பதிவாக தங்களது ஒப்புதலை பெயர் முகவரியுடன் 9787871008 அல்லது      9629021773 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களுக்கு அனுப்பவும். ஒப்புதல் (Endorcement) வழங்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பெயரும் முகவரியும் தாங்கள் அனுப்பியுள்ளவாறு மாநிலக் கல்விக்கொள்கை வரைவுக்குழுவுக்கு அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவர்கள்,

பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம்,

தமிழ்நாடு.

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தில் பார்வையற்றோர் தொடர்பான பரிந்துரைகள்: பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம், தமிழ் நாடு

பரிந்துரைகளைப் பதிவிறக்க

தங்களின் உடனடி ஒப்புதலை வழங்கிட இணைப்பில் உள்ள படிவத்தை நிரப்புங்கள்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *