வெளிச்சம் பாய்ச்சுவோம் (1)

வெளிச்சம் பாய்ச்சுவோம் (1)

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
பிரெயில் மற்றும் அச்சு வடிவில் ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட பலகை
பிரெயில் மற்றும் அச்சு வடிவில் ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட பலகை

புகழ்பெற்ற அந்த மாவட்டத்தின் ஒரு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்போது ஐந்தாம் வகுப்புப் படித்துவரும் ஒரு குறைப்பார்வையுடைய (low-vision)சிறுமி அவள். கண்ணாடி அணிந்தும்கூட அக்குழந்தையால் கண்ணுக்கு மிக அருகிலேயே புத்தகங்களை வைத்துப் படிக்க முடிகிறது. இதனால் அன்றாட கற்றல் நடவடிக்கைகளில் அக்குழந்தை மிகுந்த சிரமத்துடனே ஈடுபட்டு வருகிறது.

மாவட்டத்தின் தலைநகரைச் சேர்ந்த மற்றொரு சிறுமி அறுகிலுள்ள நகராட்சிப் பள்ளியில் முதலாம்வகுப்புப் படித்துவரும் முழுப்பார்வையற்ற (totally-blind)குழந்தை. இவர்கள் உதாரணங்களுக்காகச் சொல்லப்பட்டவர்கள். இவர்களைப் போல அந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகள் தங்கள் தொடக்க மற்றும் நடுநிலைக்கல்வியை அனைவருக்கும் கல்வித் திட்டத்தால் (SSA) செயல்படுத்தப்படும் உள்ளடங்கிய கல்வி (Inclusive Education) வாயிலாக தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளிகளில் பயின்றுவருகிறார்கல் என சம்பிரதாயமாகச் சொல்லலாம். வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை என்பதையே  கலத்தில் நம்மால் உணரமுடிந்தது.

இதுபோன்ற நிலை  நான் மேற்சொன்ன மாவட்டத்தில் மட்டுமல்ல; மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுவே பொதுவிதியாக உள்ளது. உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின்கீழ் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள சாதாரண பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளும், அவர்களை சாதாரணக் குழந்தைகளோடு இணைத்துக் கற்பிக்கப் பணிக்கப்படும் வகுப்பாசிரியர்களும் தங்கள் தொடக்க மற்றும் நடுநிலைக் கல்விசார் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் பல்வேறு நடைமுறை இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கல எதார்த்தம்.

மேற்கண்ட தகவல்களும், குமுறல்களும் அரசின் திட்டத்திற்கு எதிரான குற்றச்சாட்டாகவோ, நியாயமற்ற விமர்சனமாகவோ பலருக்கும் தோன்ற வாய்ப்பிருக்கிறது. எனவே, உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் நோக்கமும், அதனை நடைமுறைப்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் குறித்தும் அத்தகைய நடைமுறைகளால் பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகள் தங்கள் தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி வாய்ப்புகளில் எதிர்கொள்ளும் அன்றாட இடர்பாடுகள் குறித்தும் நாம் விரிவாக விளங்கிக்கொள்வது அவசியம்.

அதற்கு முதலில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாறுகள் பற்றியதுமான புரிதல்கள் பரப்பப்பட வேண்டியது அவசியம்.

அத்தகைய சிறிதினும் சிறியதான எனது இந்த முயற்சிக்குக் கைகொடுக்க விரும்புவோர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான கல்வித் தளங்களில் செயல்படுவோர், ‘வெளிச்சம் பாய்ச்சுவோம்’ என்ற தொடரில் தங்கள் அனுபவங்களை எழுதலாம். தங்கள் பங்களிப்பை எதிர்பார்த்தபடியே, எனக்குத் தெரிந்த செய்திகளை பகிர்ந்துகொள்ள தொடரவிருக்கிறேன்.

இனி தினம் தினம், வெளிச்சம் பாய்ச்சுவோம்… இருள் ஓட்டுவோம்!

***ப. சரவணமணிகண்டன்

***

கல்வி உரிமைகளைக் காக்க கரம் கொடுங்கள்.

கருத்துகளை வழங்குவதோடு, கட்டாயம் படித்தபின் பகிருங்கள்.

பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைக்கும்

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோரின் பரிந்துரைகள்:

அன்புடையீர் வணக்கம்!

தமிழக அரசு உருவாக்கிவரும் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோர்களுக்கு இருக்கும் கல்வி தொடர்பான எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் தொகுத்து, மாநில அரசுக்குப் பரிந்துரைகளாக வழங்க பார்வையற்றோர்களின் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. எனவே பார்வையற்றோர்களுக்கான #சிறப்பு, #ஒருங்கிணைந்த #உள்ளடங்கிய கல்வி சார்ந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பார்வையற்றோர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளும், பார்வையற்றோரின் கல்வி வளர்ச்சியின்மீது அக்கறை கொண்டவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்களும், பிர பார்வையற்றவர்களும், பொதுமக்களும் மாநிலக் கல்விக்கொள்கை பரிந்துரைக்குத் தங்களுடைய கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது

     9629021773

மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com

உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் அனைத்தும், ஆரோக்கியமான விவாதத்துக்குப் பிறகு தொகுக்கப்பட்டு, மாநில கல்விக்கொள்கை குழுவிடம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *