உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது முதுமொழி.
கற்பித்தவரை காலமும் நினை என்பது நமது கவி.
20 ஆண்டுகளுக்கு முன், அதாவது பள்ளி தொடங்கப்பட்டு சரியாக முப்பதாம் ஆண்டில், சிறிய கல் போன்று சென்ற என்னை சிறந்த சிற்பமாக்கியது புனித வளனார் பார்வையற்றோர்க்கான பள்ளி.
அப்பள்ளியின் பொன் விழா கொண்டாட்டத்திற்கான முன்னாள் மாணவர்களின் அழைப்பிதழ்
1972ல் தொடங்கிய நமது பள்ளி 2022ல் இன்று 50 ஆண்டுகளை நிறைவுசெய்து மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது.
இப்பொன்விழாவை முன்னிட்டு நமது பள்ளியானது பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றது. ஆதலால் பள்ளியின் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் தவறாமல் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்
பொன்விழாவை முன்னிட்டு விழாமலர் பிரெயில் மற்றும் அச்சு வடிவில் வெளியிடப்படுகிறது. விழாமலருக்கான கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், ஓவியங்கள், பாடல்கள், நகைச்சுவைகள், துணுக்குகள் மற்றும் நமது சொந்தப் படைப்புகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.
இப்படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள்: ஜூலை, 9, 2022.
அதேநாளில், (ஜூலை 09) அன்று, முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி மற்றும்
சகோதரி சிரியா, அருள் தந்தை அமல்ராஜ் இருவருக்கான பொன்விழா ஆண்டு பாராட்டுவிழாவும்,
நல்லாசிரியர் விருதுபெற்ற ஜெஸ்ஸி ஆசிரியைக்கான பாராட்டு விழாவும் நடைபெறவிருக்கிறது.
விளையாட்டுப்போட்டிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வயதின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
18-25, 25-35, 35-45, 45 வயதுக்கு மேல் என்ற வகையில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர்ஜூன் 21க்குள் முன் பதிவு செய்துகொள்ளவும்.
முன்பதிவு செய்வதற்கு:
விஜயகுமார் 9443415621 மற்றும்
வாசுகி 9940777517
விழா மலருக்கான உங்கள் படைப்புகள் பிரெயில், அச்சு மற்றும் கையெழுத்து என ஏதேனும் ஒரு வடிவில் இருக்கலாம். உங்கள் படைப்புகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளை நேரடியாகவோ அல்லது இணைய வழியிலோ அனுப்பலாம்.
தொடர்புக்கு: பள்ளித் தலைமை ஆசிரியர் – 9486177735
புனித வளனார் பார்வையற்றோர்க்கான மேல்நிலைப்பள்ளி,
ஜஸ்டின் நகர்,
பரவை,
மதுரை மாவட்டம்.
சுபா: 8754335838
செலின்மேரி: 9952459465
ரங்கநாதன்: 9150750527
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிகழ்விலும் பங்கெடுத்து,எதிர்வரும் நவம்பர் 5, 2022ல் நடைபெறவிருக்கின்ற பொன்விழாவிற்கு வருகை தந்து உங்கள் மகத்தான பங்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாம் பள்ளியால் பெருமையடைந்தோம்,
நம்மால் பள்ளி பெருமை அடையட்டும்.
மேலும் தொடர்புக்கு:
Be the first to leave a comment