நண்பர்களுக்கு கர்ண வித்யா குழுமத்தின் வணக்கம்!
கோடை கால கணினி பயிற்சிகளுக்கான சிறப்பு அழைப்பு.
கர்ண வித்யா அமைப்பு, பார்வையற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக பின்வரும் கணினி பயிற்சிகளை குறுகிய காலப் பயிற்சியாக, நேரடி மற்றும் இணையவளியில் நடத்த உள்ளது.
தகவல்களை முழுமையாக படித்து, விரைவாக விண்ணப்பியுங்கள்!
மேலும் விவரங்களுக்கு, 9789800794
மற்றும் 7806857514 என்ற எண்களை தொடர்புகொள்ளவும்.
பயிற்சிக்கான இணைப்பு:
https://forms.gle/z4dt5QnZYjih8f1PA
பயிற்சி ஒன்று: ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கணினி பயிற்சி.
பயிற்சி காலம்: மூன்று வாரங்கள் – (தொடங்கும் நாள்: 23-05-2022).
நடைபெரும் நாள் மற்றும் நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை பதினொன்று முப்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை.
நடைபெரும் முறை: நேரடி மற்றும் இணையவழியாக.
பயிற்சி இரண்டு: பத்து முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கணினி பயிற்சி.
பயிற்சி காலம்: இரண்டு வாரங்கள் – (தொடங்கும் நாள்: 01-06-2022).
நடைபெரும் நாள் மற்றும் நேரம்: திங்கள் முதல் சனி வரை பிற்பகல் இரண்டு மணி முதல் மூன்று முப்பது மணி வரை.
நடைபெரும் முறை: நேரடி மற்றும் இணையவழியாக.
பயிற்சி மூன்று: பார்வையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கான கணினி பயிற்சி.
பயிற்சி காலம்: இரண்டு வாரங்கள் – தொடங்கும் நாள்: (01-06-2022).
நடைபெரும் நாள் மற்றும் நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை பத்து மணி முதல் பதினொன்று முப்பது மணி வரை.
நடைபெரும் முறை: இணையவளியாக.
இந்த செய்தியை அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பரவலாக பகிர்ந்திடுக!
நன்றி!
சுட்டிக் குழந்தைகளும் குட்டிக் கதைகளும் – கதைசொல்லி ஜானகியுடன்.
நண்பர்களுக்கு கர்ண வித்யா குழுமத்தின் வணக்கம்!
பள்ளிக் குழந்தைகளின் ஆழுமை மற்றும் மொழித் திறன்களை வலுவூட்டும்பொருட்டு,
நடிகர், கதைசொல்லி, திருமதி ஜானகி சபேஷ் அவர்களுடன், மாதம் ஒருமுறை, ‘சுட்டிக் குழந்தைகளும் குட்டிக் கதைகளும்’ என்ற தலைப்பில் கதைக்கேட்டு கதைக்க பார்வையற்ற பள்ளி குழந்தைகளை கர்ண வித்யா அன்புடன் அழைக்கிறது.
நிகழ்வுக்கான தகவல்கள்:
ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
மாதம் ஒருமுறை (ஞாயிற்றுக்கிழமைகளிள்) நடைபெரும்.
இடம்: RR Tower III, Guindy Industrial Estate, Chennai -32.
இந்நிகழ்வின் முதல் அறங்கம், வரும் மாதம் (June) 5ஆம் நாள்(ஞாயிறு அன்று) நடைபெரும்.
ஆர்வமுள்ள குழந்தைகளின் பெற்றோர்களை, கீழே உள்ள படிவத்தை, 31 May 2022(செவ்வாய் கிளமைக்கு) முன் பூர்த்திசெய்யும்படி கேட்டுக்கொல்கிரோம்.
Link: https://forms.gle/jXGmDPdfmLU28j9L6
… தொடர்புகொள்ள, 78068 57514.
அனைவரும் இணைக! கதைகளுடன் மகிழ!
Be the first to leave a comment