தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2022 - 23: மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சொல்லப்பட்டவை என்ன?

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2022 – 23: மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சொல்லப்பட்டவை என்ன?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர்
நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர்

பட மூலம்: இந்து தமிழ்த்திசை

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

2022 23 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினை மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களைப் படிக்க

மாற்றுத்திறனாளிகள் நலன்

96) சிறப்புத் தேவையுள்ள ஒவ்வொரு குழந்தையும் நன்கு வளர்வதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு ஆரம்பக் கட்டத்திலேயே குறைபாட்டைக் கண்டறிந்து
சிகிச்சை வழங்குவது இன்றியமையாததாகும் . தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை , சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை பள்ளிக்கல்வித் துறை , மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் இப்பணிகளைத் தனித்தனியாகச் செய்கின்றன . இத்துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து , தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்து , பல்வேறு வகையான சிகிச்சை மையங்கள் மூலம் சிறப்புத் தேவைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் .

97) தரமான ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால்
நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களுக்கு அரசு சம்பள மானியம் வழங்கி வருகிறது. இந்நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்,

98)கடுமையாகப்
பாதிக்கப்பட்ட
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகைக்காக 450 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

99) இம்மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *