கவிதை: “யார் நீ எனக்கு?” சந்தோஷ்குமார்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ச
சந்தோஷ்குமார்

கூகுல் செய்திகளில் எங்களைப் பின்தொடர்ந்து சவால்முரசு செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே க்லிக் செய்யவும்

   யார் நீ எனக்கு?

யார் நீ எனக்கு?

அன்பின் வடிவான  அன்னையா?

அறிவு புகட்டும் தந்தையா?

உற்ற தோழனா? – என்

 உயிரோடு கலந்த உடன்பிறப்பா?

யார் நீ எனக்கு? யார் நீ எனக்கு?

   தாய்மொழியாம் தமிழ் மொழியின் பெருமையை அறிய வைத்தாய்:

மேலும் அதன் சிறப்பினை புரிய வைத்தாய்:

இலக்கணத்தை இன்னும் இனிமை ஆக்கினாய்:

எனக்குப் புரியும்படி இன்னும் அதனை எளிமை ஆக்கினாய்:

  தித்திக்கும் திருக்குறளின் சுவையை தெவிட்டாமல் எனக்கு ஊட்டினாள்:

ஆங்கிலத்தின் அறிமுகத்தையும் எனக்கு காட்டினாய்:

யார் நீ எனக்கு? யார் நீ எனக்கு?

   கணிதத்தின் புனிதத்தை உணர வைத்தாய்:

கணித அறிவை என்னுள் வளர வைத்தாய்:

சராசரியை சாதாரணம் ஆக்கினாய்

விகிதம் என்ற வில்லனை என்  நண்பனாக்கினாய்:

பின்னங்களை என் எண்ணங்கள் ஆக்கினாய்:

விந்தையான அறிவியலை என் சிந்தையில் ஏற்றினாய்:

யார் நீ எனக்கு? யார் நீ எனக்கு?

   வரலாற்றை விரும்ப வைத்தாய்:

புவியியலை புரிய வைத்தாய்:

பொருளியலை என் புத்தியில் ஏற்றினாய்:

மொத்தத்தில் சமூக அறிவியலை என்னுள் புகுத்தினாய்: ஆம்.

 என் சமூகத்திலும் என்னை புகுத்தினாய்.

எனக்கென பலரை உரவாக்கினாய்: அவர்களினால்

 பல அறிவு வித்துக்களை என் வாழ்வின் வரவாக்கினாய்:

யார் நீ எனக்கு? யார் நீ எனக்கு?

   நான் மென்மேலும் உயர  பயன்படும் ஏணியோ?

எனக்கு உழைப்பை கற்றுக்கொடுக்கும் தேனீயோ?

ஓய்வின்றி ஓடும் உனக்கு இதோ ஓர் ஆண்டிற்கான விழா

நின்று சற்று இளைப்பாறு

அப்படியே எனக்கு பதில் கூறு.

ஓய்வின்றி ஓடும் உன்னிடம்

கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது என்னிடம்

இதுவரை நான் கேட்டு பதில் தெரியாமல் போனதில்லை உனக்கு

உண்மையில் யார் நீ எனக்கு? யார் நீ எனக்கு?

   விடையில்லா கேள்விக்கு விடை அறிய முற்பட்டு

விடையின்றி விடைபெறுகிறேன்3 Full stop

ஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!

இம்மையத்தில்உள்ள  அனைத்து ஆன் சலிவன்களுக்கும்

இக்கவிதை சமர்ப்பணம்!

***

ச. சந்தோஷ்குமார்

தொடர்புக்கு: Smsanthosh7198@gmail.com

கவிஞர் முதுகலைப் பட்டதாரி.

இக்கவிதை, ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்காக அவரால் எழுத்இ வாசிக்கப்பட்டது.

தொடர்புடைய பதிவுகள்:

ஒரு பெருமிதத் தருணம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *