ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016 நான்கு விழுக்காடு பணியிடங்களை ஊனமுற்றோருக்காக ஒதுக்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. சட்டத்தை முழுமையாக அமல்ப்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் அதிக முனைப்பு காட்டிவருகிறது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் நடத்திய ஒரு தேர்வில் பார்வையற்றவர்களைத் தேர்வெழுதக்கூடாது என மறுத்திருப்பது நிச்சயமாகவே சட்ட மீறல்தான். இதுகுறித்த உரையாடலில் பங்கேற்ற முனைவர். திரு. சிவக்குமார் அவர்கள், நீதித்துறையின் இத்தகைய சட்ட மீறலை எதிர்த்து விரைவில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்படும் என உறுதியாகச் சொன்னார். அதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் முனைவர். திரு. அரங்கராஜா அவர்கள் கொந்தளிப்புடன் காணப்பட்டாலும், அவருடைய பேச்சு உணர்வுகளைச் சுண்டி எழுப்புவதாக அமைந்தது.
உண்மையில் நடந்ததும், இனி நம் முன் இருக்கிற வாய்ப்புகள் குறித்தும் நம்மவர்களேனும் அறிந்துகொள்ள சவால்முரசு முன்னெடுத்த இந்த உரையாடல் உதவும் என நம்புகிறோம்.
Be the first to leave a comment