பேராசிரியர் திரு. தீபக்நாதன் அவர்களின் தலைமையிலான டிசம்பர் 3 இயக்கம், மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் துணைத்தலைவரான பேராசிரியர் திரு. ஜெயரஞ்சன் அவர்களைச் சந்தித்து,மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 19 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை வழங்கியிருக்கிறது.
ஒவ்வொரு கோரிக்கையும் நன்கு ஆராயப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு தொடங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கான அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பதியும்போது, பதிவுக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என அனைத்துத் தளங்களையும் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து திட்டமிடப்பட்ட கொள்கை ஆவணமாகவே இந்த மனு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எதிர்காலங்களில் அரசால் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள், சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் என அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முன்பாக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை மிக முக்கியமானது. இது துறையின் தலைவரே சிந்திக்கவோ முன்வைக்கவோ தயங்கும் ஒரு அம்சம்.
ஒரு மாற்றுத்திறனாள்ளி என்ற முறையில், திரு. தீபக்நாதன் அவர்களுக்கும் அவரின் டிசம்பர் 3 இயக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
திரு. தீபக்நாதன் அவர்களின் முகநூல்ப் பதிவைக்காண
***
ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
Be the first to leave a comment