உலகப் பெண்கள் தினத்தை ஒட்டி, மாற்றுத்திறனாளி பெண்களின் வாழ்வியல் மிக விரிவாகப் பேசப்பட வேண்டும் என விழைகிறது சவால்முரசு. எனவே இந்த மாதம் முழுவதும் சவால்முரசின் வழக்கமான கட்டுரைகளுக்கிடையே மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் அவர்கள் குறித்த மாற்றுத்திறனாளி அல்லாத இருபாலரின் படைப்புகளை வரவேற்கிறது ஆசிரியர்க்குழு.
மாற்றுத்திறனாளிப் பெண்களே! உங்கள் படைப்புகள் எதைப்பற்றியும் இருக்கலாம். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதுமையான சமையல்/அழகு/வீடு பராமரிப்புக் குறிப்புகள், நீங்கள் படித்த புத்தகம் பற்றிய பத்திகள், உங்கள் சொந்த அனுபவங்கள் என எது வேண்டுமானாலும் எழுதி அனுப்புங்கள்.
உங்கள் படைப்புகள் ஒருங்குறி வடிவிலானது என்றால் உடனுக்குடன் இணையத்தில் நமது சவால்முரசு தளத்தில் தவழும். பிரெயில், ஒலிப்பதிவுகள் போன்றவை வடிவ மாற்றத்தில் தனக்கேயான கால அவகாசம் கோரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
mail@savaalmurasu.com அல்லது
9655013030 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும் அனுப்பலாம்.
உரையாட வாருங்கள்! இது உங்களுக்கான களம்.
அனைவருக்கும் உலக மகளிர்தின வாழ்த்துகள்.
Be the first to leave a comment