ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் கொண்டாடும்
ஜனவரி 4 உலக பிரெயில் நாள் மற்றும்
பார்வையற்றோருக்கான ஹெலன்கெல்லர் போட்டித் தேர்வு மையத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா:
சிறப்பு விருந்தினர்: மதிப்பிற்குரிய திரு. உ. சகாயம் இ.ஆ.ப. அவர்கள்
துணைத்தலைவர் அறிவியல் நகரம்.
நாள்: ஜனவரி 3 ஞாயிற்றுக்கிழமை, 2021, நேரம்: மாலை 3 மணி.
கூட்டஇணைப்பு:
கூட்டக் குறியீடு: 881 1263 4945
கடவு எண்: 411809
அன்புத் தோழமைகளே!
உலகப் பார்வையற்றோரின் ஒரே ஞானத்தகப்பனான லூயி பிரெயில் அவர்களின் பிறந்தநாளான ஜனவரி நான்கை உலகமே பிரெயில் நாளாகக் கொண்டாடிவருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை நாம் அதனைப் பார்வையற்றோர் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கும்படி வலியுறுத்தி வருகிறோம்.
இன்று நன்கு படித்து முடித்த பார்வையற்ற பட்டதாரிகள் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சனை வேலையின்மை. எங்கும் எதற்கும் தேர்வுகள்தான் தீர்வு என்றாகிவிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 9 2020 அன்றுமுதல் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில், பார்வயற்றோர் பயன்பெறும் விதமாகப் போட்டித் தேர்வுகளுக்கான இணையவழிப் பயிற்சி மையத்தைத் (Coaching Centre for Competitive exams) தொடங்கி நடத்தி வருகிறோம்.
இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 3 மறைந்த லூயி அவர்களின் 211ஆவது பிறந்தநாள் மற்றும் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் நடத்தப்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான போட்டித் தேர்வுகளுக்கான இணையவழி பயிற்சி மையத்தின் நூறாவது நாள் விழாவையும் உங்களோடு இணைந்து கொண்டாட விரும்புகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
நிகழ்ச்சி நிரல்:
சிறப்புக் கலந்துரையாடல்:
பார்வையற்றோர் வளர்ச்சியில் பிரெயில் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும் தேவையான மேம்பாடும்:
நெறியாளர்: திரு. பார்த்திபன் அவர்கள் கனரா வங்கி சென்னை.
பங்கேற்போர் – பிரெயில் அணி:
- திரு. பொன். சக்திவேல்
முதுகலைத் தமிழாசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்.
- திருமதி. செலின்மேரி
ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் புதுக்கோட்டை மாவட்டம்.
- திரு. அரங்கராஜா
கல்லூரி விரிவுரையாளர் – தமிழ்த்துறை சென்னை.
தொழில்நுட்ப அணி:
- திரு. ரகுராமன்
பேராசிரியர் ஆங்கிலத்துறை சென்னை.
- செல்வி. இளங்கோதை
கல்லூரி விரிவுரையாளர் தமிழ்த்துறை அரக்கோணம்.
- திரு. மகேந்திரன்
பேராசிரியர் ஆங்கிலத்துறை சென்னை.
விழா தொடக்கம்:
- தமிழ்த்தாய் வாழ்த்து.
- வரவேற்புரை: திருமதி. சுவேதா
உறுப்பினர் – ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
- தலைமை உரை: செல்வி. U. [சித்ரா
தலைவர் – ஹெலன்கெல்லர் மா.தி.ந.சங்கம்
- பயிற்சி மைய பயிற்சியாளர்கள் உரை:
செல்வி. வனஜா மற்றும் செல்வி. நந்தினி
- வாழ்த்துரை:
திரு. சகாதேவன் – தலைவர், இந்திய மாற்றுத்திறனாளிகள் ஃபவுண்டேஷன்
திரு.பாண்டியராஜன் – இந்தியன் வங்கி சென்னை.
- பரிசளிப்பு நிகழ்வு.
- சிறப்பு விருந்தினர் உரை:
உயர்திரு. சகாயம் இ.ஆ.ப. அவர்கள்
துணைத்தலைவர் – அறிவியல் நகரம்.
- நன்றி உரை:
திரு. ஜெயபாண்டி – செயற்குழு உறுப்பினர்
ஹெலன்கெல்லர் மா.தி.ந. சங்கம்.
நிகழ்ச்சி தொகுப்பு: திரு. சுரேஷ்குமார்
துணைத்தலைவர் – ஹெலன்கெல்லர் மா.தி.ந. சங்கம்.
விழா சவால்முரசு வலையொளிப் பக்கத்தில் நேரலை செய்யப்படும்.
திரளாய்ப் பங்கேற்போம் – பிரெயிலின் அவசியத்தைத்
திக்கெட்டும் பரப்புவோம்.
நிகழ்ச்சியில் கரைபடாத கறங்களுக்கு சொந்தக்காரர் ஐயா சகாயம் அவர்கள் பங்கேற்க இருப்பது நமக்கு மட்டுமல்ல இந்த நிகழ்ச்சிக்கே பெருமையாக இருக்கிறது