பட மூலம்: newzhook.com
- நாட்டிலேயே அதிக ஊனமுற்றோரைக் கொண்ட இரண்டாவது மாநிலம் பீகார். அங்கு ஊனமுற்றோரின் எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்குகிறது.
- மொத்த ஊனமுற்றவர்களில் 62 விழுக்காடு ஆண்கள், 37 விழுக்காடு பெண்கள்.
- மாநிலத்தின் ஊனமுற்றோரில் உடல்ச்சவால் கொண்டோர் பாதிக்குமேல் அதாவது 46.83 விழுக்காடு இருக்கிறார்கள். பார்வைச்சவால் கொண்டோர் ஒன்பது விழுக்காடு மட்டுமே.
- மாநிலத்தின் ஊனமுற்றவர்களில் சுமார் 56 விழுக்காடு படிப்பறிவில்லாதவர்கள்.
- 50 விழுக்காடு ஊனமுற்றோருக்கு முறையான கல்வி கிடைப்பதில்லை.
- கிராமங்களைச் சார்ந்த ஊனமுற்றவர்களில் 3 விழுக்காடு பெண்களும், 20 விழுக்காடு ஆண்களும் பட்டதாரிகள். நகர்ப் புறங்களில் பெண்கள் 11 விழுக்காடும், ஆண்கள் 40 விழுக்காடும் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
- மொத்த ஊனமுற்றவர்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பவர்கள் 33 விழுக்காடு. இந்தியா முழுமைக்கும் அடையாள அட்டை பெற்ற ஊனமுற்றவர்கள் 29 விழுக்காடு.
- மாநில அரசு மற்றும் நடுவண் அரசின் ஊனமுற்றோருக்கான இந்திராகாந்தி ஓய்வூதியத் திட்டம் என இரண்டு வகையான ஓய்வூதியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
- இரண்டு திட்டங்களாலும் பயன்பெறும் ஊனமுற்றோரின் எண்ணிக்கை ஐம்பது விழுக்காடு.
- இரண்டு திட்டங்்கள் மூலமாக வழங்கப்படும் மாதாந்திர தொகை எவ்வளவு தெரியுமா? தலா 400. மாநிலத் திட்டத்தில் 40 விழுக்காடு ஊனமடைந்த அனைவரும் பயன்பெற, நடுவண் திட்டத்திலோ, 80 விழுக்காட்டிற்கு மேல் ஊனமடைந்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். மாநில அரசின் இந்த 400 தொகையும் ஜித்தராம் மாஞ்சி முதல்வராகப் பதவி வகித்த 2014 ஆம் ஆண்டிலிருந்துதான் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு உதவித்தொகை வெறும் ரூ. 100. அதுவும் தொடங்கியது 2009 ஆம் ஆண்டிலிருந்துதான்.
Be the first to leave a comment