graphic ஆர்சிஐ சுற்றறிக்கை

விழிப்புடன் செயல்பட்ட என்பிஆர்டி, விழி பிதுங்கி நிற்கும் ஆர்சிஐ

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஆர்சிஐ சுற்றறிக்கை
ஆர்சிஐ சுற்றறிக்கை

ஊனமுற்றோருக்கான சேவைகளைக் கண்காணித்தல், சிறப்புக் கல்விக்கான கலைத்திட்ட வடிவமைப்பு, நாடெங்கிலும் பல்வேறு நிலைகளில் சிறப்புக் கல்வியில் பட்டயம் மற்றும் பட்டம் பெறுவோருக்கான அங்கீகாரம் வழங்குதல் போன்ற பணிகளை நிர்வகிப்பதற்காக இந்திய நாடாளுமன்றச் சட்டத்தால் 1992ல் ஏற்படுத்தப்பட்டதுதான் இந்திய மறுவாழ்வுக்குழு (Rehabilitation Council of India RCI).

நாடெங்கும் தனது கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறும் பல்வேறு பட்டயப் படிப்புகளுக்கான 2020 21ஆம் ஆண்டிற்கான சேர்க்கையை இணையவழியில் நடத்தியது ஆர்சிஐ. இதில்தான் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளை அப்பட்டமாக மீறியிருக்கிறது. இதனால் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பித்த பல மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விஷயத்தில் உடனடியாகத்தலையிடுமாறு, நடுவண் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலருக்க்உக் கடிதம் எழுதியிருந்தது ஊனமுற்றோருக்கான தேசிய மேடை என்பிஆர்டி.

இதனை, “இந்திய மறுவாழ்வு கவுன்சில் நடத்திடும் வகுப்புகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்திடும் அமைச்சகம் தலையிட ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை-NPRD கோரிக்கை” என செய்தி வெளியிட்டிருந்தோம். ஆர்சிஐயின் முக்கியமான விதிமீறலாக என்பிஆர்டி சுட்டிக்காட்டியது, செவித்திறன் குறைபாடுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கும் இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சி சேர்க்கையில் மாற்றுத்திறனாளி அல்லாதவர்களுக்க்உ இடம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத்தான்.

இந்நிலையில், கடந்த 16 நவம்பர் 2020 அன்று ஆர்சிஐ தனது இணையதளத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய சைகைமொழி பட்டயப் பயிற்சிக்கான சேர்க்கை நடைமுறைகள் அப்படியே ஒதுக்கப்பட்டு, புதிய நடைமுறைகள் தொடங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வரவேற்றுள்ள ஊனமுற்றோருக்கான தேசிய மேடை (NPRD),தங்களுடைய கடிதத்தில் சுட்டப்பட்டுள்ள பிற விதிமீறல்களுக்கும் உரிய நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *