graphic O. பன்னீர்செல்வம்

ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: அரசாணையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் எவை?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
துணைமுதல்வர் பன்னீர்செல்வம்

“பார்வைத் திறனற்றோர் மற்றும் கேட்கும் திறனற்றோர் பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்குத் தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் 10000 பார்வைத்திறனற்ற மற்றும் கேட்கும் திறனற்றோருக்கு ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்.”

இது, கடந்த பிப்பரவரி 14ஆம் நாள் தமிழகத்தின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து துணைமுதல்வரும் நிதியமைச்சருமான மாண்புமிகு திரு. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு. அதன்படி, தலா 5000 பார்வைத்திறன் குறையுடையோர் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு ரூ. 10000 மதிப்பிலான திறன்பேசிகள் வழங்கிட தமிழக அரசு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஆணை பிறப்பித்துள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் யாவை?

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் திறன்பேசிகள், ஏற்கனவே அங்கன்வாடித்துறை, பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சுகாதாரத்துறையில் வழங்கப்படும் திறன்பேசிகளுக்கு இணையானதாக இருத்தல் வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் தெரிவித்திருந்தார். அதன்படி, ரூ. 10 கோடியை ஒதுக்கியிருக்கிற தமிழக அரசு, 5000 பார்வைத்திறன் குறையுடையோருக்கும், 5000 செவித்திறன் குறையுடையோருக்கும் ரூ. 10000 மதிப்பிலான திறன்பேசிகள் வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

திறன்பேசியின் முக்கிய அம்சங்கள்:

  1. ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 9 அதற்குமேல்.
  2. திரை அளவு 6.2 அதற்குமேல்.
  3. 18 GHZ புராசசர்.
  4. 3 அல்லது 4 GB ராம் மற்றும் 32 அல்லது 64 GB இண்டர்னல் மெமரி 256 GB வரை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.
  5. LCD டிஸ்ப்லே மற்றும் 4000 MAH (non-removable) பேட்டரி அல்லது அதற்குமேல்.
  6. டூயல் சிம் மற்றும் மெமரி ஸ்லாட்.

இந்தத் திறன்பேசிகளைப் பெறுவதில், 60 விழுக்காடு இளங்கலை பயிலும் உயர்கல்வி மாணவர்களுக்கும், 20 விழுக்காடு வேலைவாய்ப்பற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.

எஞ்சிய 20 விழுக்காட்டில், 15 விழுக்காடு சுய தொழில் செய்வோரும், 5 விழுக்காடு பெண்களும் பயனடைவர் எனத் தெரிகிறது.

அரசாணையைப் படிக்க:

பகிர

1 thought on “ரூ. 10000 மதிப்பிலான 10000 ஸ்மார்ட் ஃபோன்கள்: அரசாணையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் எவை?

  1. கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *