அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்: வரலாற்றை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் முக்கியப் படைப்புகள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
வெண்கோலின் உதவியுடன் செல்லும் நான்கு பார்வையற்றவர்கள். படத்தின் கீழே world white cane day என எழுதப்பட்டுள்ளது.
பட மூலம், விரல்மொழியர் மின்னிதழ்

இன்று உலக வெண்கோல் தினம். அனைவருக்கும் உலக வெண்கோல் தின வாழ்த்துகள்.

பார்வையற்றோர் சுய சார்புடன் தங்கள் வழிகளில் எதிர்படும் தடைகளை அறிந்து, தங்கள் பாதையில் முன்னேறிச் செல்ல உதவும் வெண்கோலின் வரலாற்றைஅறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகள் முக்கியமானவை.

“நாங்களும் படிச்சிருக்கோம் history of white cane”

புதுக்கோட்டையிலுள்ள  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளி மாணவிகள் உரையாடல் வழியாக வெள்ளை ஊன்றுகோலின் வரலாற்றைச் சுவையாகச் சொல்லும் யூட்டூப் காணொளி.

மூன்று மாணவிகளில் ஒருவருக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்படுவதாகவும், அவர் வெண்கோல் பயன்படுத்தாததால்தான் அவருக்கு அடிபட்டதாக மற்றவர்கள் கூற, அது என்ன வெண்கோல் என்று அந்த மாணவி கேட்பதிலிருந்து வரலாறு தொடங்குகிறது.

“உலகப்போர்களுக்குத்தான் நன்றிசொல்ல வேண்டும்”

வெண்கோலின் வரலாற்றைத் தன் சுவாரசியமான எழுத்தால் நமக்கு எடுத்துச் சொல்கிறார் விரல்மொழியர் மின்னிதழின் ஆசிரியர் பாலகணேசன்.

12ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலிலிலிருந்து வெண்கோலின் வரலாற்றைத் தொடங்கும் திரு. பாலகணேசன், உலகப்போர்களுக்குப் பின்னான வெண்கோலின் பயன்பாடு குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார்.

https://viralmozhiyar.weebly.com/29492965302129753019298629923021-2018/2443059

தனது சொற்பொழிவின் மூலமாக வெண்கோலின் வரலாற்றை விளக்கும் பேராசிரியர் ஊ. மகேந்திரன் அவர்களின் யூட்டூப் காணொளியும் அதன் வரலாற்றை அறிந்துகொள்வதில் நமக்கான முக்கிய ஆவணமாக இருக்கிறது.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *