கௌதமி |
வணக்கம் என் பெயர் கௌதமி. சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம். எனக்குப் பிறந்ததிலிருந்தே பார்வையில பிரச்சனை இருந்துச்சு. கொஞ்சம் வருஷத்துக்கு முன்னால ஒரு ஆப்பிரேஷன் பண்ணினாங்க. அதுக்கு அப்புறம் இருந்த கொஞ்சப் பார்வையும் போயிடுச்சு. படிப்பும் அதிகம் இல்லை சேலம் பார்வையற்றோருக்கான அரசுப்பள்ளியில எட்டாவதுவரைக்கும்தான் படிச்சேன். இப்போ எனக்கு 25 வயசாகுது. மேலும் படிச்சு நல்ல ஒரு அரசு வேலைக்குப் போகனும்கிறதுதான் என் எண்ணம். அதனால பத்தாவது பரிட்சைக்குப் ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன். கூடவே புடவை வியாபாரமும்.
உங்களால நம்ப முடியலைனா என் கடைக்கு வாங்க. உங்களுக்கு பிடிச்ச புடவை, சுடிதார் எல்லாமே இருக்கு. 24 மணிநேரமும் என் கடை திறந்துதான் இருக்கும். ஆமா இதுக்காக எங்க காங்கேயம் வாரது, அதுவும் இந்த லாக்டவுன் சமயத்திலனு நீங்க நினைக்கிறது புரியுது. அட என் கடைக்கு எல்லா இடத்திலும் கிளைகள் இருக்கு. ட்ரெண்டிங் கலெக்ஷன்ஸ் என் கடையோட பேரு. கடையோட முகவரி குறிச்சுக்கோங்க.
https://www.facebook.com/Trending-collections-346542779263244/?ti=as
எட்டாம் வகுப்புக்கு அப்புறமா நான் சேலம் திருவேனி ட்ரஸ்ட் நடத்துன கம்பியூட்டர் கோர்ஸ் படிச்சேன். பிறகு வோடோஃபோன் கஸ்டமர் கேர்ல கொஞ்சநாள் வேல பார்த்தேன். அப்போதான் ஸ்மார்ட் ஃபோன் பழகுனேன். அப்புறமா புடவை வியாபாரம் பற்றி யூட்டூப்ல ஒரு வீடியோ பார்த்தேன். நாமலும் இப்படிப் பண்ணுனா என்னணு எனக்கு தோணுச்சு. அப்புறமா அது சம்பந்தமாவே நிறைய வீடியோஸ் பார்த்தேன். ஆன்லைன்ல புடவை வியாபாரம் செய்யுற ஒரு வாட்ஸ் ஆப் குழுவில சேர்ந்தேன். அதுல வியாபாரிகள் மட்டும் இல்லாம நிறைய மேனுஃபேக்சரர்ஸ் தொடர்பும் கிடைச்சது. தொடக்கத்தில என்னை யாரும் நம்பலதான். அவுங்களோட புராடக்ட நான் வித்துத் தந்ததுக்கு அப்புறமாத்தான் என்னை நம்ப ஆரம்பிச்சாங்க.
எல்லா மேனுஃபேக்சரர்ஸும் அவுங்களோட புராடக்ட் டிஸ்க்ரிப்ஷனோட எனக்கு வாட்ஸ் ஆப்ல அனுப்பிடுவாங்க. அதில கலர் பற்றின விவரம் மட்டும் இருக்காது. அதை நான் அம்மா, அல்லது ஃப்ரண்ட்னு யார்கிட்டேயாவது வெரிஃபய் பண்ணிக்குவேன். அதை என் வாட்ஸ் ஆப் நம்பர் சேர்த்து என் ஃபேஸ்புக் பேஜ்ல போட்டுடுவேன். அந்த டிஸைன்ஸ் பிடிச்சிருந்தா கஸ்டமர்ஸ் என்னை காண்டக்ட் பண்ணுவாங்க. அவுங்களோட முகவரியை குறிச்சுக்குவேன். அப்படியே என்னோட வங்கி எண் கொடுத்திருவேன். அவுங்க பணம் போட்டபிறகு, சம்பந்தப்பட்ட மேனுஃபேக்சரருக்கு நான் கொடுக்க வேண்டிய தொகையும் கஸ்டமரோட முகவரியும் அனுப்பிருவேன். அவுங்களும் என்னோட ட்ரெண்டிங் கலெக்ஷன்ஸ் பேரிலேயே கஸ்டமருக்கு ஆர்டரை அனுப்பிடுவாங்க. கனடா வரைக்கும் எனக்கு கஸ்டமர் இருக்காங்க.
Summer cotton office wear sarees for booking WhatsApp 97877 30621 price 500-1000 free shipping active resellers welcome worldwide delivery available |
எனக்கு ஸ்மார்ட் ஃபோன்தான் எல்லாமே. எதுவா இருந்தாலும் என் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறது யூட்டூப் வீடியோஸ்தான். ஃபேஸ்புக் பேஜ் மட்டும்இல்லாம, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எல்லாத்திலையும் எனக்கு அக்கவுண்ட் இருக்கு. இப்போதைக்கு நான் என்னோட பிசினஸ் வாட்ஸ் ஆப்தான் அதிகம் பயன்படுத்துறேன். வெறும் எட்டாம் வகுப்பு படிச்சதுக்கே நம்மால இவ்லோ செய்ய முடியுதுனா, நிச்சயம் நிறையப் படிக்கோனும், ஒரு கவர்மண்ட் வேளையில உட்காரோணும்கிறதுல தீவிரமா இருக்கேன். ஏனுங்க, நான் இவ்லோ சொல்லிட்டேன்ல. ஒரு தடவ என் கடைக்கு வந்துதான் பாருங்களேன். அட, புடவ வாங்கிறதெல்லாம் அப்புறம். ஒரு லைக்கு, ஷேரு, கமெண்டு.
தொடர்புகொள்ள: 9787730621
கட்டாயம் எனது மணைவிக்கு நான் இவர்களிடம் வாங்குவேன். இவரை அரிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.
தொடரட்டும் உங்கள் பணி.
இவருடைய இந்த தன்னம்பிக்கை வாழ்வில் வெற்றி பெற வழிவகுக்கும்