வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
சென்னை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக் கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் படிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பாடத்திட்டத்தை சுலப மாக வடிவமைக்க வேண்டும் என்று ஒரு சில தலைமை ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளை தெரிவிக்கும்படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை யின் மூலம் அனைத்து சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரால், சாதாரண மாணவ, மாணவியர் கற்கும் பாடப்புத்தகங்களைப் படிக்க இயலும். அவற்றுக்கான தகுதியும், திறனும் அவர்களிடம் உள்ளன. அவர்களுக்கு ஏற்றவாறு கற்று தர வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் அவர்களுடைய பணியினை முழுமையாகச் செய்வதில்லை.
இதுமட்டுமின்றி, சிறப்பு பள்ளிகளில் காலிப்பணியிடங்களும் நிறைய உள்ளன. இத்தகைய கார ணங்களை மூடி மறைத்துவிட்டு மாணவர்கள் மீது பழி போட்டு பாடத்தை குறைப்பதோ அல்லது சுலபமாக வடிவமைப்பதோ சரியாக இருக்காது.
என்னதான் திறமை இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் படித்து முடித்துவிட்டு பணியில் சேர்வது, போட்டி தேர்வுகளை எதிர்கொள் வது பெரும் சவாலாகத்தான் இருந்து வருகிறது. இவ்வாறு, இருக்க பாடத்திட்டத்தை மாற்றி சுலபமாக வடிவமைக்கப்பட்டால், திறன் குறைவாக இருப்பதாகக் கூறி மாற்றுத்திறனாளி மாணவர்கள் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப் புள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கற்று தரும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், தற்போது நடைமுறையில் இருந்து வரும் 10 மாணவருக்கு 1 ஆசிரியர் என்ற வீதத்தை மாற்றி 6 மாணவருக்கு 1 ஆசிரியர் என்று குறைக்க வேண்டும், காலி பணி யிடங்களை நிரப்ப வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாற்றுத்திற னாளி மாணவ, மாணவியருக்கு சிறப்பான கல்வி கிடைக்க வழிவகை ஏற்படும் என்றனர்.மாற்றுத்திறனாளிகள் படித்து முடித்துவிட்டு பணியில் சேர்வது, போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது பெரும் சவாலாகத்தான் இருந்து வருகிறது.
Be the first to leave a comment