புதுக்கோட்டை
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்.4) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். இதில், 74 கோரிக்கை மனுக்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்(பொ) ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment