புதிய கல்விக்கொள்கை வரைவு 2019ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி குறித்தோ, சிறப்புப் பள்ளிகள் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை. உள்ளடங்கிய கல்வியை அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்குமான ஒரே தீர்வாக வைக்கிற புதிய கல்விக்கொள்கையின் வரைவை மிகக் கடுமையாக எதிர்க்கிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
எனவே, எமது சங்கமானது, புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்தான தனது கருத்துகளைத் தொகுத்து அதனை நடுவண் அரசிற்கு அனுப்பியிருக்கிறது. எங்களின் கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில், பொதுமக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் கீழே இருக்கிற தொடுப்பைக் க்லிக் செய்து எமது கருத்துகளைப் படிப்பதோடு, மற்றொரு தொடுப்பில் இருக்கிற தனிநபர் கோப்பைப் பதிவிறக்கி, அதில் தங்கள் பெயரை இணைத்து nep.edu@nic.in என்ற மின்னஞ்சலுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் கருத்துகளைத் தொகுத்து, அதனை முறைப்படுத்தியதோடு, ஆங்கிலத்தில் ஒரு முக்கிய ஆவணமாக்க் கொண்டுவந்த திருவள்ளுவர் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றான கல்லக்குறிச்சி அரசு கல்லூரியில் பணியாற்றும் முனைவர். கு. முருகானந்தன் அவர்களுக்கு எமது சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment