நன்றி இந்து தமிழ்த்திசை
அரியலூர்
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி.
அரியலூர்
மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது, 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணி, முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலையில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நா.சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment