மக்களவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. பொது மக்களை எப்படிக் கவர்வது, எந்த அறிவிப்பு பெருவாரியான மக்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் என அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சிந்தித்துக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்மாதிரியாய், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு, மாக்சிஸ்ட் கம்நியூஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது.
தேர்தல் அறிக்கையைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் படித்து அறிந்துகொள்ளும் வகையில், அதனை ஒலிவடிவில் வெளியிட்டிருக்கிறது சிபிஎம். பொதுவுடைமைக் கட்சியின் இந்த முன்னெடுப்பை மனதாரப் பாராட்டி வரவேற்பதோடு, இந்த நடைமுறையை அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் பின்பற்றி, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகளுக்கான நலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவன், ப. சரவணமணிகண்டன்
சிபிஎம் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கேட்க
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment