பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
graphic கணினி கற்கும் மாணவனின் படம்
பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினி பயிலரங்கம்

22/05/2019 – 26/05/2019
அறிவிப்பை முழுமையாக படித்தபின் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முதலில் பதிவு செய்யும் 50 பங்கேற்பாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும்.
பதிவு செய்ய கடைசி நாள்: 05/05/2019.
அன்புடையீர்,
அரிமா சங்கங்கள் மற்றும்  ப்ரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் பார்வையற்றோர் நலனில் ஈடுபாடுடைய சிறந்த கல்வி நிறுவனத்தோடு இணைந்து நடத்தும், பார்வையற்றோருக்கான ஐந்து நாள் கணினிப் பயிலரங்கம் 22/05/2019 புதன் முதல் 26/05/2019 ஞாயிறு வரை நடைபெற உள்ளது. தங்குமிடம் உணவு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கட்டாயமாக மடிக்கணினி, சார்ஜர், இண்டர்நெட் மோடம், ஹெட்ஃபோன்  போன்றவற்றை கொண்டுவர வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தங்களது பெயர், பணி அல்லது கல்வி விவரம்,, தாங்கள் பயன்படுத்தும் திரைவாசிப்பு மென்பொருள் (NVDA Or JAWS) எது, கீழேக்  குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் தாங்கள் எந்த பிரிவில் பயிற்சி பெற விரும்புகிறீர்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை வரும் 05/05/2019 ஞாயிற்றுக் கிழமைக்குள் திரு. ராமராஜ் அவர்களிடம்  தெரிவித்து, பதிவுக் கட்டணம் ரூபாய் 200  செலுத்தி  தங்கள் வரவை உறுதி செய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.  முதலில் பதிவு செய்யும் 50  நபர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே தயவுக்கூர்ந்து தாங்கள் பங்கேற்க இயலுமா என்பதை உறுதி செய்தபிறகு பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பிரிவுகள்
1.கணினி அறிமுகம், தட்டச்சு உள்ளிட்ட அடிப்படைப்  பயிற்சி, மைக்ரோசாஃப்ட் வேட் மற்றும் இணையம் அறிமுகம்.
2.பயன்பாட்டு நோக்கில் மைக்ரோசாஃப்ட் வேட், மைக்ரோசாஃப்ட் எக்சல்  மற்றும் இணையம்.
3கூடுதல் பயன்பாட்டாளர்களுக்கான பிரிவு.
1.கணினி மேலான்மை.
2.மென்பொருள் நிறுவுதல் நீக்குதல் மற்றும் இயக்குதளம் (OS) நிறுவுதல்.
3.கொக்கோஃபிக்ஸ் லினக்ஸ் பயன்பாடு அறிமுகம்.
4.ஆடியோ எடிட்டிங்.
5.வீடியோ எடிட்டிங் அறிமுகம்.
6.தமிழ் மற்றும் ஆங்கில ஒளிவழி எழுத்துணரி (OCR).
7.HTML உருவாக்குதல்.
8.சொந்தமாக வலைப்பக்கம் உருவாக்குதல்.
9.கூகுல் விண்ணப்பம் மற்றும் வினா நிரல் உருவாக்குதல்.
10.ஆண்டிராய்டு குறுஞ்செயலி உருவாக்குதல் அறிமுகம்.
11.ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துதல்.
அனைத்து பிரிவினருக்கும் ஆண்டிராய்டு பயன்பாடு தேவைக்கேற்ப இடையிடையே பயிற்றுவிக்கப்படும்.
வகுப்பு நடைபெறும் முறை
·         குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும்.
·         பிரிவு மூன்று தவிற மற்ற பிரிவினருக்கு தனித்தனி பயிற்றுநர்கள் அமர்த்தப்படுவர்.
·         தேவைப்பட்டால் தலைப்பிற்கேற்ப பொது வகுப்புகள் ஏற்படுத்தப்படும்.
·         வகுப்புகள் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையிலும் மீண்டும் 03.00 மணி முதல் 06.30 மணி வரையிலும் நடைபெறும்.
·         கோடைகாலம் என்பதால் உணவு இடை வேளைக்கு பிறகு ஓய்வு நேரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
·         காலை மற்றும் மாலை வகுப்புகளுக்கிடையே தேநீர் இடை வேளை வழங்கப்படும்.
பயிற்சி விதிமுறைகள்
·         அனைவரும் கட்ட
ாயம் மடிக்கணினி சார்ஜர், ஹெட்போன், இண்டர்நெட் மோடம் கொண்டுவர  வேண்டும்.
·         ஏற்கனவே பங்கேற்றவர்கள் அதே பிரிவில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
·         கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பயிலரங்கங்களில் பங்கேற்றவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள அடுத்த நிலையிலான பிரிவுகளில் பங்கேற்களாம்.
·         பிரிவு 2 மற்றும் பிரிவு  3இல் கலந்துகொள்பவர்களுக்கு கணினியைத் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் நன்கு பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
·         பிரிவு மூன்றில் பங்கேற்பவர்கள் கூடுதல் பயன்பாட்டாளர்களாக கருதப்படுவர். அவர்களுக்கென்று தனி பயிற்றுநர் அமர்த்தப்படமாட்டாது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பயிற்றுநர் வந்து கருத்துகளைப் பகிர்ந்து செல்வர்.
பதிவு செய்பவர்களின் மேலான கவனத்திற்கு
பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களால் கலந்துகொள்ள இயலுமா என்பதை முடிவு செய்தபின் வரவை உறுதி செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கடந்த ஆண்டு பதிவு முடிந்த பிறகு பலர் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க இயலவில்லை. இறுதியில் பதிவு செய்த சிலர் வரவில்லை இதனால் தேவை இல்லாத குழப்பம் ஏற்படுகிறது. எனவே வரவை உறுதிசெய்துகொண்ட பிறகு பதிவு செய்யவும்.
பங்கேற்பவர்கள் முழுமையாக ஐந்து  நாட்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். முதல் ஒரு நாள் தாமதமாக வருவதோ, இடையில் ஒரு நாள் வெளியே செல்ல அனுமதி கேட்பதோ, இறுதியில் ஒருநாளைக்கு முன்னதாக புறப்படுவதோ அனுமதிக்கப்படமாட்டாது.
நடைபெறும் இடம்: சென்னை. மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
பதிவிற்கு தொடர்புகொள்ள
திரு. ராமராஜ்
7010293340
9940418957
மேலதிக விவரங்களுக்கு
திருமதி. பத்மா ஆனந்த் – 96 00 02 68 91.
திரு. ர. ராஜா – 99 40 39 38 55.
திரு. சே. பாண்டியராஜ் – 98 41 12 91 63.
நன்றி.
— 
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *